பக்கம்:தமிழக குறுநில வேந்தர்கள்.pdf/89

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

88 தமிழகக் குறுநில வேந்தர் 'பல்லவர் கோனந்தி மல்லை யன்றிக் கூறாளிவ ளிளங்கொங்கை யவன்வளர்` தொண்டையல்லா னாறா திவள் திருமேனி” எனக் கூறுதலா னுணரலாம். (நந்திக்.40) “பாசிலைத் தொண்டைப் பல்லவன்” (தொல். அகத். 54) என்னும் மேற்கோட் டொடர்க்கும், பசிய இலைகளை யுடைய தொண்டையந் தளிரில் வளர்ந்த பல்லவன் என்று கூறுதல் பொருந்திற்றாகும். பொருள் பகத்துப், “பதியின் வளர்ந்த நறுந்தொண்டை யங்கோனந்தி பல்லவர்க்கு' நந்திக்கலம் (45) என்புழி உறைவிடம்போல வளர் நறுந்தொண்டை எனக் கூறலாவதன்றி வேறாகாமை நோக்கிக் கொள்க. அமராவதி ஸ்தூப சாசனத்தும் (No. 32.S.1.1.Vol. i) “பல்லவ போகாஸ் தரணெ ஸயாநம் பிதாஸுதம் பல்லவ இத்யவாதி தளிர்த் திரளாகிய பாயலிற் (தொட்டிலிற்) கிடந்த மகவினைத் தந்தை பல்லவன் என்றழைத்தனன் என்ற தன்றி இன்ன பல்லவம் என்று உரையாமையுங் காண்க. இதன் உண்மை “அவன் வளர் தொண்டையல்லால் நாறா திவள் திருமேனி" என்றதனால் நன்கு வெளியாதல் கண்டு Q.51 677 56. இனிக் கோவைச் சாற்றாற் பிழைத்து அதனாற் பிம்பசாரன் எனப் பெயர் சிறந்த பேரரசனும் புத்தர் காலத் துள்ளனாதலால் வடநாட்டு இத் தொண்டைப் பொருட் பெயர் சிறத்தல் அறியலாம். இதனால் இது பழைமை அரசர் குடி வழக்கென ஈண்டைக்கு, நினைக்க. இப்பல்லவர் அஹிச்சத்திரம் (பாம்புக்குடை உடையர்) என்பது பிற் காலத்தும் மறக்கப்படாமை,