பக்கம்:தமிழக குறுநில வேந்தர்கள்.pdf/95

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

94 துணைவராய் தமிழகக் குறுநில வேந்தர் நெடுங்காலம் ஸ்வதந்த்ரராய்ப் போந்த சேதுபதிகள் திருமலைநாயகர் மதுரையை யாளத்தொடங் கியபோது திருமலை நாயகர் மந்திரி ராமப்பையன் சூழ்ச்சியாற் பெரிய குலபரம்பரையை மட்டும் உடைய ராய்ச் சிறுகிய நிலையி லெஞ்சிய பாண்டியவரசரோடு பகைத்துப் பின் நாயகர்க்குச் சில காலம் அடங்கியிருந்தன ரென்பது, “திரமேற விசுவநாதத் திரும லேந்திரன் சித்தமகிழ் ராமப் பையன் செங்கோட்டு வேலருட னுமைபாக ரைத்தொழுது திக்கு விசயஞ் செய்தனன் உரமான தென்கடற் றிருவணை யடைத்தன னுலகு நாற்ப திலக்கமும் ஒருகுடைக் கீழாக வாக்கினை புரிந்தனன் னுடையவன் மனது வரவே துரமான மலையாள முங்கொள்ளை றுட்டரைக் கழுவேற்றினன கொண்டனன் சோரரை யொடுக்கினன் குருவியழ கன்றலை துணித்தனன் பாண்டியரையும் பொரமாற விட்டுச் சடைக்கனை யடக்கினன் பூசுரர்க டேவர் பதியும் பொலிவுற நடத்தினன் சந்த்ரசூ ரியரளவு | புகழ்நிலை நிறுத்தினானே. (திருச்செங்கோட்டுத் திருப்பணிமாலை) என்னும் பழையபாடலா னறியப்படுவது. ராமப்பையன்விஷயமாக ஓரம்மானை நூல் சென்னைக் கையெழுத்துப் புத்தகசாலையி லுள்ளது. அதன்கண் ஸேதுபதிபோரில் ராமப்பையனை எதிர்த்துப் பொருது பட்டவன் ஸேதுபதிமருமகனாகிய வன்னித்தேவன் என்று கூறியுள்ளது. ய