உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தமிழக நாட்டுப்புறக் கலைகள் 01.pdf/153

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




129

முருகன் வள்ளி திருமணக் கதையும் மதுரையில் மதுரை வீரன் கதையும் அதிகமாகப் பாடப்படுவது உண்டு. இவை தவிர காத்தவராயன், கட்டப்பொம்மன் கதைகளும் பார்த இராமாயணக் கதைகளையும் பாடி ஆடுவர். ஒரு நீண்ட புல்லாங்குழல், உறுமி மேளம் ஆகியவற்றைப் பயன்படுத்தி ஆடுவதையும் காணலாம். சமயத் தொடர்புடைய பழமையான கதைகளைப் பாடியாடுவ தால் மக்கள் தேவராட்டத்தை

விரும்பிப் பார்க்கிறார்கள்.

ஒயிலாட்டம்

திருச்சி, கோவை,

மதுரை போன்

மாவட்டங்களில்

ஒயிலாட்டம் சிறந்து விளங்கி திருவிழா நிகழ்ச்சிகளுக்குப் பெருமையும் பொலிவும் ஊட்டுகிறது. திருநெல்வேலி மாவட்டத்துச் சிற்றூர்களிலும் இது நடைபெறுகிறது. ஆனால் கலைஞர்கள் அங்கு அதிகம் இல்லை. மதுரை, கோவை முதலிய மாவட்டங்களில் இருந்தே வருகின்றனர். இந்த ஆட்டத்தில் பெரும்பாலும் 12 முதல் 20 கலைஞர்கள் கலந்துகொண்டு நிகழ்ச்சியை நடத்துவர். சில சமயம் 40 பேரும் வரிசை வரிசை யாக நின்று ஆடுவார்கள்.

ஆட்டத்தில் கலந்து கொள்வோர் வெள்ளை ஆடையை ஒன்றுபோல் கட்டியிருப்பர். சில இடங்களில் பல வண்ண ஆடைகளுடனும் ஆடுகிறார்கள். கழுத்துப் பட்டை அகன்று இருக்கும். கால் சட்டைகளும் அணிந்திருப்பர், விதவிதமான அணிகலன்களைப் பூண்டு வருவர். காலில் சதங்கை கட்டி யிருப்பர். கையில் ஆளுக்கு ஒரு கைக்குட்டையை நுனியில் பிடித்து அதை அழகாக வீசி வீசி ஆடுவார்கள்.

இவர்களுக்குத் தலைவராக ஒரு வாத்தியார் உண்டு. ஆடுபவர்கள் ஒரு வரிசையில் அல்லது இணையான இருவரிசை யில் நிற்பார்கள். வாத்தியார் வரிசையின் முன்னாலோ அல்லது இணை வரிசையின் இணைப்பகுதியிலோ, நின்று பாடுவார். மற்றவர்கள் அவரைப் பின்பற்றி அழகாக இணைந்து பாடுவர் டோலக், ஜலரா முதலிய தாள வாத்தியக் கருவிகள் அடிக்கப் படும். ஆட்டம் திறந்த வெளியில்தான் நடக்கும். இடை யிடையே உரையாடல் உரைநடையில் நடைபெறும். நகைச் சுவைக்காகச் சமூகக் குறிப்புகளும் இடையிடையே சுட்டப்படும்.