உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தமிழக நாட்டுப்புறக் கலைகள் 01.pdf/184

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




152

பண்ணைக்காரனின் சினத்தைப் போக்க முயல்கிறான். தன்னை நினைத்துக் கோபம் கொள்ளும் பண்ணைக்காரனின் நினைவைத் திசை திருப்பும் நோக்கத்துடன் அவள் கடிந்து பேசுவதற்கு முன்னரே பள்ளன் விரைந்து வித்துவகை, மாட்டு வகை, ஏர் வகை போன்றவற்றை அடுக்கிக் கூறுகிறான். நாடகக் காட்சிக்கும் அதைக் கண்டு களிப்போர்க்கும் அவனுடைய அடுக்குரைகள் அருமையாகப் பொருந்தி பெருமையாகக் கருதும் அளவுக்குச் சிறப்பாக அமைந்துவிடு

கின்றன. அறிந்த செய்திகளையும் ஆவலுடன் வரவேற்கும் தன்மை நாட்டுபுற மக்களிடம் உண்டு. பள்ளன் கூறுபவை மக்கள் அறிந்தவையே ஆகும்.

இடையர் ஆட்டுக்கிடை கட்ட வருகின்றனர். உரமிட்டு வயல்கள் வளமாக்கப்படுகின்றன. இனி அவற்றை உழுது பயிரிடவேண்டும். தொழில் ஆயத்த நிலையில் காட்சி வாழ் வியலுக்கு மாற்றப்படுகிறது. இத்தகைய காட்சி மாற்றங்கள் கலைக்குச் சிறப்பைக் கொடுக்கும். கண்டு களிப்போரின் மனச் சலிப்பை மாற்றும். மூத்த பள்ளி பண்ணைக்காரன் முன் தோன்றிப் பள்ளனைக் குறை கூறி முறையீடுகிறாள். தன்னைப் புறக்கணித்து இளையாளிடம் இணைபிரியாது இருப்பதை வருத்தத்துடன் கூறுகிறாள். இவ்வாறு பலர் பள்ளர் குடியில் இருந்திருக்கலாம். அவ்வாறு இருத்தல் முறையன்று என்பதை அறிவுறுத்தும் நோக்கத்துடன் இப்பகுதி பள்ளு நாடகத்தில் இணைக்கப்பட்டிருக்கும் எனக் கருதலாம். மூத்த பள்ளியின் வாழ்க்கை அவலத்தை உணர்ந்த பண்ணைக்காரன் பள்ளனை முறைப்படுத்தும் நோக்கத்துடன் அவனைக் குட்டையிலிடு கிறான். கடுமையான தண்டனையை நாடகக் காட்சியாகக் காணுவோர் இத்தகைய தவறுகளைச் செய்யாது இருக்கலாம். செய்தோர் திருந்தலாம். பள்ளன் குட்டையில் மாட்டப்பட்டு வருந்துகிறான். இதைக் கண்டதும் மூத்த பள்ளி மனம் வருந்தி சினம் குறைந்து பண்ணைக்காரனை வேண்டி பள்ளனை விடுவிக் கிறாள். இதுவும் மக்களுக்குச் சிறந்த அறிவுரைக் காட்சியாக அமையும்.

பயிர்த்தொழில் காட்சிகள் மீண்டும் தொடர்கின்றன. உழுகிறார்கள், விதை தெளிக்கிறார்கள். முளை வெளிவருகிறது. நாற்றைப் பிடிங்கி நடுகிறார்கள், கருநடவாகிறது, கதிராகிறது கதிர் முற்றி விளைகிறது. அறுவடை செய்யப்படுகிறது. பள்ளன் நெற்கணக்கை ஒப்புவிக்கிறான். அத்தனையும் பாடல் காட்சி