உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தமிழக நாட்டுப்புறக் கலைகள் 01.pdf/185

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




153

களாகப் பள்ளியில் இடம்பெறுகின்றன. இக் காட்சிகள் சிறுவர் களுக்குப் பாடபோதனைகளாகவும் பெரியவர்களுக்கு அனுபவக் காட்சிகளாகவும் அமையும்.

பின்னரும் பள்ளியருக்கு இடையில் ஒரு சண்டைக் காட்சி நடைபெறுகிறது. ஒருவரை ஒருவர் பலவாறாக ஏசிப் பேசி மோதுகின்றனர். அது நகைச் சுவையாக இருந்தாலும் வாழ்வில் அவ்வாறு நடப்பவர்களுக்கு ஊசிக் குத்தாகி அவர்களைக் கூசிக் குறுகுமாறு செய்யும் என்ற உண்மையை உணரலாம். இறுதியில் இருவரும் மனம் பொருந்தி இணைந்து வாழ உறுதி பூண்டு இறை யருளால் விளைந்த விளைவை உண்டு களிக்க கடவுளை வாழ்த்தி விரைகிறார்கள்.

நாற்று நடுகையில் பள்ளர்கள் சமூக விதிக்குப் புறம்பாகப் பள்ளியருடன் நடத்தும் காமக்களியாட்டங்கள் சில பாடல்களில் நகைச் சுவையாக விளக்கப்படும். அதற்காக அவர்கள் அடிபடு வதும் அவதிப்படுவதும் அம்பலப்படுத்தப்பெறும். அனைத்தும் இன்பக் கூத்தாகிப் பார்ப்பவர்களைத் தவறாது தடுக்கும் அறிவுரைகளாக

அமைவது

சிறப்பாகும்.

உண்மைகளை

உவப்புடன்கூறி நன்மையை நயமாகச் சொல்லி விளக்கும் பக்குவமான கலையாகப் பள்ளு நாடகம் விளங்குகிறது.

பண்ணைக்காரன்

பள்ளியரால் எள்ளி நகையாடப்படுவது சிந்தனைக்கு உரியது. உழைக்கும் மக்களை நிலவுரிமையுடை யோர் ஆணையிட்டு வேலை வாங்குவதை அவர்கள் எதிர்க்கவும் முடியாமல் விரும்பவும் முடியாமல் தவிப்பதைத்தான் அது காட்டுகிறது. மேலாணையராகவும் தங்களுக்குத் தொழில் தந்து காக்கும் அன்பராகவும் பண்ணைக் காரனைப் பயிரிடுவோர் கருதியிருந்தால் இவ்வாறு நகைத்து எள்ளல் செய்திருக்க மாட்டார்கள். பாடல் இயற்றியோருக்கும் அத்தகைய நிலை உடன்பாடாக இருந்திருக்க முடியாது. உடன் பாடாயின் பண்ணைக்காரனைக் கேலிக்கு உரியவனாகப் படைத்திருக்க மாட்டார்கள். உருவப் பொலிவற்ற ஆணவக் காரனாகவே பண்ணைக்காரனை உருவாக்கியுள்ளனர். பயிரிடுவோர் தங்களுடைய உழைப்புக்குத் தகுந்த உரிமையும் ஊதியமும் தரப் படவில்லை என்றே கருதியிருக்க வேண்டும். சில பாடல்களில் இத்தகைய குறிப்பு நுட்பமாகப் புகுத்தப் பெற்றுள்ளது.

பதினாறாம் நூற்றாண்டிலிருந்து பள்ளு நாடகம் தமிழ் மக்களால் நடிக்கப் பட்டிருக்கும். அதற்கு முன் நாட்டுப்புற