154
மக்களிடம் உழத்திப் பாட்டு, பள்ளுப் பாட்டு பறைப் பாட்டு, பள்ளேசல் ஆகியவை வாய்மொழிப் பாடல்களாக இருந் துள்ளன. அவை வளர்ந்து கூத்தாகிச் சிறந்துள்ளன. பின்னர் மன்னரைப் புகழ்வதற்கும், வள்ளலை வாழ்த்துவதற்கும், இறைவனைப் போற்றுவதற்கும் தகுந்த இலக்கிய அமைப்பாக மாறியுள்ளது. பல பள்ளி இலக்கியங்கள் தோன்றியுள்ளன. அவை நடிக்கப் பெற்றும் போற்றப்பட்டும் வந்தன. இன்று பள்ளு மேடையை மறந்து அச்சுப் பதிப்பில் நிலைத்துத் தமிழுக்கு ஒரு நல்ல இலக்கிய அணியாகி விளங்குகிறது.
பாமர, மக்களின் எளிய வாழ்வை இனிதாக விளக்கும் பள்ளு நாடகம் தமிழ் மக்களின் கலைத்திறனுக்கு நல்ல எடுத்துக் காட்டாகவே உள்ளது. இசையும் நடிப்பும் இணைந்த பள்ளு நாடகத்தை நாட்டுப்புற மக்கள் விரும்பியதினால் அது நூறாகப் படைக்கப்பட்டு பெற்றுள்ளது.
குறவஞ்சி நாடகம்
பல
பல டங்களில் பலகாலம் நடிக்கப்
மலையிடங்களில் வாழும் குறவர் குல மக்கள் குறிசொல்லும் ஆற்றல் மிக்கவர். பச்சை குத்தும் கலையும் அறிந்தவர். ஆகையினால் நாட்டுப்புற மக்களிடம் அவர்களுக்கு நெருங்கிய தொடர்பும் புகுத்தும் உரிமையும் இருக்க வழி ஏற்பட்டது. குறி கேட்கும் ஆவல் அனைவருக்கும் இருப்பது இயல்பு. ஆகையினால் குறமகளிர் மக்களுடன் நெருக்கமான உறவுடன் பழகியிருப்பர். அவர்களுடைய வாழ்க்கை இயல்புகளை நன்றாக அறிந்தோர் அவற்றைக் கொண்டு கதைகளைப் புனைந்ததுடன் கலைகளை யும் கண்டுபிடித்தனர். குறி சொல்லுவதே அவற்றில் முக்கிய இடம் பெற்றது.
- இறப்பு நிகழ்வெதி ரென்னும் முக்காலமும் திறம்பட வுரைப்பது குறத்திப் பாட்டே'
என்று பன்னிரு பாட்டியல் விளக்குவதைக் காணலாம். அதோடு குறவர் வாழும் மலை, வணங்கும் தெய்வம், செய்யும் வேட்டைத் தொழில் ஆகியவற்றையும் இணைத்து விளக்கினர். மக்களுடைய வாழ்க்கை இயல்புகளையும் சேர்க்கக் கருதி ஒரு காதற்காட்சியும் அதனுடன் இணைந்து பின்னப்பட்டது. இறுதியில் குறவனும் குறமகளும் ஒருவரை ஒருவர் சந்தித்து. மகிழ்வதும் சேர்க்கப் பட்டது. தலைவன் கடவுளாகவும் சிறப்புடைய மனிதனாகவும்