உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தமிழக வரலாறு-சங்ககாலம்-அரசர்கள்.pdf/105

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

99

“ஒருவனை ஒருவன் அடுதலும், தொலைதலும்
புதுவதன்று; இவ்வுகலத் தியற்கை;
இன்றின் ஊங்கோ கேளலம்;
..........................
நாடுகெழு திருவின் பசும்பூண் செழியன்
பீடும் செம்மலும் அறியார் கூடிப்
பொருதும் என்று தன் தலை வந்த
புனைகழல் எழுவர் நல்வலம் அடங்க
ஒரு தானாகிப் பொருது களத்து அடலே”
-புறம்,76

“இமிழ்கடல் வளைஇய ஈண்டகன் கிடக்கைத்
தமிழ்தலை மயங்கிய தலையாலங் கானத்து
மன்னுயிர்ப் பன்மையும், கூற்றத்து ஒருமையும்
நின்னொடு தூக்கிய வென்வேற் செழிய”
-புறம்-19

“கொய் சுவல் புரவிக் கொடித் தேர்ச் செழியன்
முது நீர் முன்துறை முசிறி முற்றிக்
களிறு பட எருக்கிய நல்லென் ஞாட்பின்...”
-அகம்.57

“சேரலர்
சுள்ளியம் பேரியாற்று வெண்னுரை கலங்க
............................................
வளங்கெழு முசிறி ஆர்ப்பெற வளைஇ
அருஞ்சமம் கடந்து படிமம் வவ்விய
நெடுநல் யானை அடுபோர்ச் செழியன்”
அகம்.149

“பல்குட்டுவர் வெல்கோவே”
-மதுரைக்காஞ்சி.105