பக்கம்:தமிழக வரலாறு-சங்ககாலம்-அரசர்கள்.pdf/115

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

109


கோவூர் கிழார், கிள்ளிவளவனை அணுகிஅறிவுரை கூறியதால் உயிர் தப்பினர், மலையமான் மக்கள்.60

திருக்கோவலூர் சாசனம் ஒன்று61 பாரி இறந்த பின்னர், அவன் மகளிர் இருவரைப் புலவர் கபிலர் வேண்ட மணந்து கொண்டனர் மலையமான்கள் எனக் கூறுகிறது.

5. நள்ளி

இவனைப் பாடிய புலவர்கள், இடைக்கழி நாட்டு நல்லூர் நத்ததத்னார்,62 காக்கைப் பாடினியார் நச்செள்ளையார்63 பரணர்,64 பெருந்தலைச் சாத்திரனார் 65 பெருஞ்சித்திரனார்66 வன்பரணர்67 ஆகிய அறுவர் ஆவர்.

இப்பாடல்கள் மூலம், இவன் வரலாறாக அறியத் தக்கன; மதுரை மாநகர்க்குத் தெற்கே உள்ள தோட்டி மலைக்கு உரியவன்68 கண்டீரக்கோப் பெரு நள்ளி, எனவும் அழைக்கப்பெறுவன்.69 இவன் தம்பி இளங்கண்டீரக் கோவும், இளம் விச்சிக்கோவும் இருந்த போது, ஆங்கு வந்த, புலவர் பெருந்தலைச் சாத்தனார், முன்னவனைத் தழுவி அன்பு காட்டிய போது, "என்னைத் தழுவாதது ஏன்?" என இளவிச்சிக்கோ கேட்க, "கண்டீரக்கோக் குடி வந்த ஆடவர் மட்டுமே அல்லாமல், பெண்டிரும் கொடைவளம் கற்றவர்; ஆகவே, அக்குடி வந்தானைத் தழுவிக் கொண்டனன்" எனக் கூறி, கண்டீரக்கோ குலத்தவரின் கொடை வளத்தைப் பாராட்டினார்70 நள்ளியின்காடு, நெய்வளம் பெருக்கும் அண்டர் எனும் ஆயர்களின் வாழிடமாம்71