உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தமிழக வரலாறு-சங்ககாலம்-அரசர்கள்.pdf/116

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

110


6. பாரி

வள்ளல்கள் எழுவர் மட்டுமல்லாமல் பலர் இருப்பினும், "கொடுக்கிலாதானைப் பாரியே எனக் கூறினும் கொடுப்பாரிலை, எனச் சுந்தர மூர்த்தி நாயனாரால், வள்ளலகளுக்கு இலக்கணமாவன் எனப் பாராட்டப்பெற்ற பாரியைப் பாராட்டிய புலவர்கள் இடைக்கழிநாட்டுநல்லூர் நத்தத்தனார்,72ஒளவையார்373 கபிலர்74 நக்கீரர்75 பாரிமகளிர்76 புறத்திணை நன்னாகனர்77, பெருஞ்சித்திரனார்78 ஆகிய எழுவராவர்.

இவர் பாடல்களால் அறியப்படும் இவன் வரலாறு வருமாறு; பாண்டி நாட்டுத் திருப்பத்துாருக்கு அணித்தாக உள்ள, இப்போது பிரான்மலை என அழைக்கப்பெறும் பறம்பு மலையையும், அதைச் சூழ இருந்த முந்நூறு ஊர்களையும் ஆண்டவன்.79 ஒரு நாள் தேர் ஏறிச் சென்றவன், வழியில் முல்லைக்கொடி ஒன்று படர்தற்குக் கொழு கொம்பு இல்லாமல் அலைப்புறுவது கண்டு, அது ஏறிப்படர்க எனத் தன் தேரை, அக்கொடி அருகே நிறுத்தி ஏறவிட்டுவிட்டுக் கால்நடையாக அரண்மனை சேர்ந்தான்.80 பறம்புமலை ஒன்று நீங்க, அதைச் சூழ இருந்த முந்நூறு ஊர்களையும் இரவலர்க்கே கொடுத்து விட்டான்.81

இவற்றால் அவன் புகழ், மூவேந்தர் நாடுகளைக் கடந்தும் பரவவே. அது பொறாத அவர்கள் அவன் பறம்பு மலையை வளைத்துக் கொண்டனர். அம்மலையில் உழுது விளைவிக்க வேண்டாமல் தாமே விளையும் காய்கனி, கிழங்கு வகைகள், இருந்ததமையால் பல காட்களாகியும், அவர்களால் மலையைக் கைப்பற்ற முடியவில்லை82 மேலும், பாரியின் உற்ற நண்பராகிய