113
ஆவியர் குடியில் வந்தாருள் பேகனும் ஒருவன். வையாவிக் கோப்பெரும் பேகன் என்றும் அழைக்கப்படுவன். அவன் பெரிய கொடையாளி, ஒருநாள் சோலையில் உலாவச் சென்றபோது, ஆங்கு ஒரு மயில் தோகை விரித்து ஆடிக் கொண்டிருக்கக் கண்டு, அதுவும் தன்னே போல் வாடைக்குளிரால் வருந்துகிறதோ என எண்ணிக் குளிருக்காகத் தான் போர்த்திச் சென்றிருந்த போர்வையை அதற்குப் போர்த்திவிட்டு குளிரால் நடுங்கியவாறே அரண்மனை வந்து சேர்ந்தான்98. பேகன்கொடை உள்ளம் அத்துணை மென்மையானது.
இவ்வளவு பெரிய கொடையாளியாகிய பேகன் பால் ஒரு பெருங்குறையும குடி கொண்டுவிட்டது; கண்ணகி எனும் நல்லாள் ஒருத்தி, அவனுக்கு மனைவியாக வாய்த்திருந்தும், அவன் பரத்தையர் ஒழுக்கத்தில் நாட்டமுடையவனாகி, நல்லூர் என்ற ஊரில் உள்ள பரத்தை ஒருத்திபால் உறவு கொண்டு அங்கேயே வாழத் தொடங்கினான்.
அவன்பால் பரிசில் பெறுவான் வேண்டி வையாவிக்கோ நகர் சென்ற புலவர் கபிலர், பரணர், அரிசில்கிழார், பெருங்குன்றுார்கிழார் ஆகிய புலவர் நால்வரும். அவன் ஆங்கு இல்லாதிருப்பதையும், அவன் மனைவி அழுது புலம்பிக் கொண்டிருப்பதையும் கண்டு, "பேகன் யாண்டுச் சென்றுள்ளான்? உன் துயர்க்குக் காரணம் யாது?'! எனக் கலங்கிக் கேட்க, அவள் அவன் ஒழுக்க நிலையை உணர்த்தவே புலவர் நால்வரும், பேகன் பால் கொடையாகப் பொன்னையும், பொருளையும், பெறுவதைக் காட்டிலும், அவனை வேண்டி, இவள்பால்கொண்டு சேர்ப்பதையே கொடைப் பொருளாக அவன்பால் கேட்டல் வேண்டும் என முடிவு