பக்கம்:தமிழக வரலாறு-சங்ககாலம்-அரசர்கள்.pdf/121

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

115


கொண்டவன்.108 நல்ல பல பண்புகளின் உறைவிடமாகத் திகழ்ந்த உயர்வோன்109 இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனார் இயற்றிய சிறுபாணாற்றுப்படை பாடலின் பாட்டுடைத்தலைவன்.

9. குமணன்

இவனைப் பாடிய புலவர்கள்,பெருஞ்சித்திரனார்110 பெருந்தலைச் சாத்தனார்111 ஆகிய இருவர்.

கோவை மாவட்டம், உடுமலைப்பேட்டையைத் தன்னகத்தே கொண்டு, பழநி வட்டத்துத் தென் மேலைப்பகுதியையும், உடுமலை வட்டத்துத் தென் கீழ்ப்பகுதியையும் கொண்ட நாடே குமணன்ஆண்ட நாடு; முதிரம் என்ற மலையகத்து ஊர் அவன் தலைநகர்.112 அவன் புகழ் பாடவந்த புலவர் பெருஞ்சித்திரனார், அவன் அஞ்சி முதல் பேகன் வரையான வள்ளல் பெருமக்கள் எழுவர் மறைவுக்குப் பின்னர், அவர்கள் எழுவர்க்கும் ஈடாக வள்ளல் பெருந்தகையாய் வாழ்ந்தவன் என்ற பாராட்டோடு, தம் பாராட்டைத் தொடங்கி உள்ளார்.113

அவன் நாடு வளம் மிக்கது; புலவர் போற்றும் வள்ளலாய் வாழ்ந்திருந்தான்.114 பெருஞ்சித்திரனார், ஒருநாள், அக்காலத்தே வாழ்ந்திருந்த வெளிமான் என்பவனும் ஒரு வள்ளல் என அறிந்து, அவன்பால் சென்று, பொருள் வேண்டி நின்றார். ஆனால் அந்தோ! அவன் இறக்கும் நிலையில் இருந்தான். ஆயினும், அந்நிலையிலும், தன் கொடைக் குணத்தை மறவாமல், தன் தம்பி இளவெளிமானை அழைத்துப் புலவர் வேண்டுவன அளித்து அனுப்புமாறு பணித்தான்; ஆனால்,