உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தமிழக வரலாறு-சங்ககாலம்-அரசர்கள்.pdf/125

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எழுசமம் கடந்த எழுவுறழ் திணிதோள்
எழுவர் பூண்ட ஈகைச் செந்நுகம்
விரிகடல் வேலி வியலகம் விளங்க”

-சிறுபாண். 85-114



“முரசு கடிப்பு இருப்பவும், வால்வளை துவைப்பவும்
அரசுடன் பொருத அண்ணல் நெடுவரைக்
கறங்கு வெள்ளருவி கல்லலைத்து ஒழுகும
பறம்பிற் கோமான் பாரியும், பிறங்கு மிசைக்
கொல்லியகண்ட வல்வில் ஒரியும்,
காரியூர்ந்து பேரமர்க் கடந்த
மாரியீகை மறப்போர் மலையனும்,
ஊராது ஏந்திய குதிரைக் கூர்வேல்
கூவிளங் கண்ணிக் கொடும்பூண் எழினியும்
ஈர்ந்தண் சிலம்பின் இருள் தூங்கு நளிமுழை
அருந்திறல் கடவுள் காக்கும், உயர்சிமைப்
பெருங்கல் நாடன் பேகனும், திருந்துமொழி
மோசிபாடிய ஆயும், ஆர்வமுற்று
உள்ளி வருநர் உலைவு நனிதீரத்
தள்ளாது ஈயும் தகைசால் வண்மைக்
கொள்ளார் ஒட்டிய நள்ளியும், என வாங்கு எழுவர்”

-புறம்.158



2. சிறுபாண். 84-114
3. புறம். 158
4. பதிற்று. 73, புறம். 230
5. நற்.381, குறுந். 80;91 -
புறம். 87,88,90-95,97.101,103,104,206,315,390
6. அகம். 105
7. அகம். 372
8. புறம். 158,208
9. புறம். 99
10. பதிற்று. 98