பக்கம்:தமிழக வரலாறு-சங்ககாலம்-அரசர்கள்.pdf/136

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

130


3. அத்தி

சேரன் படைத்தலைவரோடு கழுமலம் எனும் இடத்தே, சோழர் படைத் தலைவன் பழையனுக்குத் துணையாகப் போரிட்டவன் வீர மரணம் எய்தியவன்".

4. அதியன்

இவனைப் பாடிய புலவர்கள் பரணரும்,12 மாமூலனாரும்,13 ஆவர் பசும் பூண் பாண்டியன் படைத் தலைவன்,14 பாண்டியனின் பகைவனான அன்னன் என்பானை வெற்றி கொண்டவன்,15வாகை எனும் ஊரிடத்தே நடந்த போரில், ஊர்ந்து சென்ற தன் களிறோடு இறந்தவன். அதியன் இறப்பு கேட்டு, அவன் பகைவரான கொங்கர் ஆரவாரித்தனர்,16ஆனால் பெருங் கொடை வள்ளலான அதியன் இறந்தான் எனக் கேட்ட புலவர்கள், தம் இசைக் கருவிகளை இயக்கவும் விரும்பாது வருந்தினர்.17

5. அந்துவன் கீரன்

படையானும், பொருளானும் பேரரசரை யொப்பச் சிறந்து விளங்கிய வீரன். வள்ளல் பெருந்தகை: காவட்டனார் என்ற புலவரின் அறவுரைகளைக் கேட்டு அஃகி யகன்ற அறிவுடையவனாய் விளங்கியவன்18

6. அந்துவஞ் சாத்தன்

ஒல்லையூர் தந்த பூதப் பாண்டியனின் துணைவன். "உரைசால் அந்துவஞ் சாத்தன்" என்ற சிறப்புப் பெற்றவன்.19