உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தமிழக வரலாறு-சங்ககாலம்-அரசர்கள்.pdf/139

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

133


செயலால் சினம் மிகக் கொண்ட அன்னமிஞிலி "அக்கோசரை அழிக்கா முன், கலத்தும் உண்ணேன். துTய ஆடையும் உடுத்தேன்" என வஞ்சினம் உரைத்தாள்.

அக் கோசரை அழிக்க வல்லவன். அழுந்தூர்த் தலைவனான திதியன் தான். என்பதை உணர்ந்தாள். அவன் பால் சென்று முறையிட்டாள் திதியனும் அவ்வீர நல்லாளின் வேண்டுகோள் ஏற்று அக்கோசரை அழித்தான். கோசர் அழிவு கண்டு அன்னிமிஞிலி சினம் தணிந்தாள். பாடிய புலவர் பரணர்33

14. ஆட்டனத்தி

ஆட்டனத்தி; சேர நாட்டு இளவரசன். சோழ மன்னன் கரிகாலன் மகள் ஆதி மந்தியை மணந்து கொண்டவன். காவிரியில் புது வெள்ளம்வரும் போது நிகழும் புனல் விளையாட்டில் பங்கு கொண்டு ஆடும்பொழுது வெள்ளத்தால் அடித்துச் செல்லப்பட்டான். மருதி என்பவளால் காப்பாற்றப்பட்டான். கணவனைத் தேடிச்சென்ற ஆதி மந்தியார், கணவன் மருதியால் காக்கப்பட்டது கண்டு மகிழ்ச்சி உற்றாள். ஆட்டனத்தியின் இவ்வரலாற்று நிகழ்ச்சியினைப் பரணரும்34; இளங்கோவடிகளும்35 தம் பாடல்களில் படம்பிடித்துக் காட்டியுள்ளனர்.

15. ஆதனவினி

சேரர் குலத்து அரசர்களுள் ஒருவன். பாடிய புலவர் ஓரம்போகியார்36.

9