பக்கம்:தமிழக வரலாறு-சங்ககாலம்-அரசர்கள்.pdf/144

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

138

சென்று வாழ்ந்த போதும், அண்ணனை அழிக்க, "குமணன் தலையைக் கொண்டு வருவார்க்கு ஆயிரம் பொன் பரிசு அளிக்க" பறையறைந்தவன்.

குமணனை நாடி காடு சென்று பாடி நின்ற புலவர் பெருந்தலைச் சாத்தனார்க்குப் பரிசு ஏதும் கொடுக்க இயலாத நிலையில், தன் தலையைக் கொய்து சென்று தம்பி இளங்குமணனிடம் பரிசு பெறுவீர் என் தன் வாளை புலவரிடம் கொடுத்தான். வாளோடு சென்ற புலவர் இளங்குமணன் பால் சென்று, நிகழ்ந்ததைக் கூறி குமணனின் சிறப்பைப் பாடி நின்றார். இளங்குமணன் மனம் திருந்தியிருப்பன் என்பது உறுதி57

29. இளவிச்சிக்கோ

விச்சி நாட்டுத் தலைவனான விச்சிக்கோவின் தம்பி இளவிச்சிக்கோ. தோட்டி மலை இளவரசன் இளங்கண்டீரக்கோவின் நண்பன். இளவரசர் இருவரும் ஒரு சேர இருந்த காலை ஆண்டு வந்த புலவர் பெருந்தலைச் சாத்தனார், இளங்கண்டீரக் கோவை மட்டும் தழுவி நின்றார். மனம் வருந்திய இளவிச்சிக்கோ புலவர் தன்னிடம் அன்பு காட்டாமைக்கு காரணம் கேட்டான்.

இளங்கண்டீரக்கோவின் குடிவளமும், கோல் வளமும், குன்றா மனவளமும் மாண்புடையன என்று புகழ்ந்த புலவர், இளவிச்சிக்கோ நல்லவன் ஆயினும் அவன் பிறந்த குடி,பெண் கொலைப்புரிந்த நன்னன் வழி வந்த பழியுடையது. அக்குடிப்பிறந்த அரசன் ஒருவன் இரவலர்க்கு பரிசில் தராது வாயிற் கதவை அடைத்தான்.