பக்கம்:தமிழக வரலாறு-சங்ககாலம்-அரசர்கள்.pdf/145

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

130

 பழியுடைய அக் குடியைப் பாடுவதை புலவர்கள் விடுத்தனர். அதனால் தான் பழியுடைய குடி வந்த அவனைத் தழுவிக் கொள்ளவில்லை. தவறு, அவனுடையது அல்ல, அவன் நல்லவனாயினும் அவன் பிறந்து குடி பழியுடையது என்று விளக்கம் அளித்தார் 58

30. இளவெளிமான்

வெளிமான் என்ற கொடை வள்ளலின் தம்பி. அண்ணனைப் போல் காெடை உள்ளம் உடையானல்லன். வெளிமான் பால் பரிசில் வேண்டி, புலவர் பெருஞ்சித்திரனார் சென்றிருந்தபோது வெளிமான் இறக்கும் நிலையில் இருந்தான். அந்த நிலையிலும் தம்பி இளவெளிமானை அழைத்து புலவர்க்குப் பரிசில் அளித்து அனுப்பச் சொன்னான். இளவெளிமானோ சிறிதே பொருள் அளித்தான். அதை ஏற்க மறுத்த புலவர் குமணனை நாடிச் சென்றார். பெருங்களிறு ஒன்றைப் பரிசிலாக வேண்டிப் பெற்றாா். அந் நெடு நல் யானையை, கொண்டு சென்று இளவெளிமானுக்குரிய காவல் மரத்தில் கட்டினார். இளவெளிமானிடம் "இரவலரைப் புரக்கும் குமணன் கொடுத்த பரிசில் இது நீ இரவலரைப் புரக்கும் புரவலன் அல்ல" என்று அறிவுரை கூறினார்.59

31. ஈர்ந்துார் கிழான் தோயன் மாறன்

கொங்கு நாட்டு ஈர்ந்தூர் தலைவன். கோயமான் என்றும் அழைக்கப்பட்டவன். உடல் முழுவதும் விழுப்புண் வடு பூண்ட பெருவீரன். வரையாது வழங்கிய