பக்கம்:தமிழக வரலாறு-சங்ககாலம்-அரசர்கள்.pdf/146

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

140

 வள்ளல் பொருள் நாடி வந்த இரவலர்க்குப் பொருள் ஈய கொல்லன் உலைக்கலம் சென்று போருக்காம் படைக்கலத் துணை கொண்டு, பகை வென்று பெரும் பொருள் கொணர்ந்து பரிசிலர்க்கு அளிக்கும் மாண்புடையவன். 'பாண் பசிப் பகைஞன்' என்று புலவர் கோனாட்டு எறிச்சிலுார் மாடலன் மதுரைக் குமரனாரால் போற்றப்பட்ட புகழுடையவன்.60

32. எருமையூரன்

குடநாடு பகுதியில், அயிரி எனும் ஆற்றங்கரையில் அமைந்திருந்த எருமையூர் தலைவன். வடுகர் இனத்தவன். நள்ளிரவில் பகைவர் தம் காவற் படைகளை அழித்து, அவருடைய ஆனிரைக் கூட்டங்களைக் கவர்ந்து வரும் பேராற்றல் வாய்ந்தவன்61 பாண்டியன் நெடுஞ்செழியனோடு, தலையாலங்கானம் எனும் இடத்தில் கடும் போர் ஆற்றிய எழுவரில் ஒருவன். தலையாலங்கானத்துச் செரு வென்ற நெடுஞ்செழியனால் தோற்கடிக்கப்பட்டவன்.62

33. எவ்வி

எவ்வி என்ற வேளிர்குடியிற் பிறந்தவன். சோணாட்டுக் கடற்கரைப் பகுதியில் இருந்த மிழலை நாட்டுத் தலைவன். நீடுர், உறந்துார் ஆகிய ஊர்களும் அவன் ஆட்சிக்குட்பட்டிருந்தனன்63. எவ்வி விற்போர், வாட்போரில் வல்லவன் "பல்வேல் 'எவ்வி'64, வாய் வாள் எவ்வி"65 'பொலம்பூண் எவ்வி66' என்றெல்லாம் அழைக்கப்ட்டவன். கொடைக் குணம் குறைவறப் பெற்ற கோன்67