144
நகரம் மாவிலங்கை.80 ஓய்மானாடாண்ட வில்லியாதன் வரையாது வழங்கும் வள்ளலாக வாழ்ந்தவன். பாடிய புலவர் புறத்திணை நன்னாகனார்.81
40. கங்கன்
சேரர் படைத் தலைவருள் ஒருவன். கழுமலம் எனும் இடத்தே நடந்த போரில் சோழர் படைத் தலைவன் பழையன் என்பானோடு போரிட்டு உயிர் துறந்தான்.82
41. கட்டி
கட்டி, வடுக நாட்டை அடுத்து வாழ்ந்திருந்த வீரன்.83 பாணன் என்ற மற்றொரு வடநாட்டு மல்லனோடு, உறையூர் தலைவனான தித்தன் வெளியனோடு மற்போரிட எண்ணி உறையூர் சென்றான். உறையூர் நாளவைக் கண், புலவரும் பாணரும்,தித்தன் புகழ் பாடி வாழ்த்தும் ஒலியைக் கேட்டு, தித்தனோடு போரிடுவது இயலாது என அஞ்சி ஓடிவிட்டான்.84
பின்னர், சேரன் கணையன் படையிற் சேர்ந்தான், கழுமலம் எனுமிடத்தே, சேரன் கணையனுக்கும், சோழன் சேரன் பெரும்பூட் சென்னிக்கும் இடையே நடந்த பெரும் போரில், சோழர் படைத்தலைவன் பழையன் என்பவனால் தோற்கடிக்கப்பட்டு அழிந்தான்.85
42. கடவன்
விளங்கில் என்ற நகரின் தலைவன். உள்ளத்தே உரனும் ஊக்கமும் பெற்றவன். பகையரசர்களின்