148
படை அழித்தமையால் அந்த யானைகளின் குருதிக் கறை படிந்த வீரக் கழல் அணிந்தவன் அக் 'கழற்கால் பண்னன்'101
வேளான் தொழில் மேற் கொண்டு வாழ்ந்த பண்ணன் 'தனக்கென வாழாப் பிறர்க்குரியாளன் பண்ணன்' என்று போற்றப்பட்டவன் 102 பல நாடுகளிலிருந்தும், புலவர்கள் அவன் புகழ் பாட வந்தனர். பாண்டிய நாட்டுப் புலவராய மதுரை அளக்கர் ஞாழலார் மகனார் மள்ளனார் என்பார் "பண்னன் புகழ் பாடேனாயின் பெரு நன்றி கொன்ற பழியுடையேனாவன், எம் மன்னன் வழுதி என் சுற்றம் வறுமையில் உழல விடுவானாக" என்று பாராட்டியுள்ளார். 103
பெருங் கொடை வள்ளலாகிய சோழன் குளமுற்றத்துஞ்சிய கிள்ளிவளவனே, பண்ணனைப் பசிப், பிணி மருத்துவன், என்று பாராட்டியுள்ளான்.104
49. சேந்தன்
சோழ நாட்டைச் சேர்ந்த ஆர்க்காடு எனும் நகரை ஆண்டவன் அழிசி என்பான்105 அவருடைய வீர மகன் சேந்தன் தன் அருந்திறத்தால், வீரத்தாய் 'சேந்தன் தந்தை அழிசி' எனக் கூறுமளவு புகழ் பெற்றவன், காவிரியில் மக்கள் நீராடும் பெருந்துறையாம் மருதத் துறையில் புகுந்து இன்னல் விளைத்த யானையை அடக்கி மருத மரத்தோடு, பிணைத்தவன் 106 பரிசில் வேண்டி வரும் புலவர்க்கு, வரையாது வழங்கும் வள்ளலாக வாழ்ந்தவன்.