153
55. திரையன்
திரையன் வெற்றி தரும் வேற்படை வீரன்.118 வேங்கட நெடுவரை ஆண்ட தொண்டை நாட்டு அரசன் கடியலூர் உருத்திரங்கண்ணனார் இயற்றிய பெரும் பாணாற்றுப்படையின் பாட்டுடைத்தலைவன். அல்லன் கடிந்து கல்லன ஓம்பும், அறநெறி அறிந்தவன். அறம் விரும்பும் பெருங்கோலன்.119
தன் பாட்டுடைத் தலைவன் திரையன் வரலாறாகக் கடியலூர் உருத்திரங்கண்ணனார் கூறுவன வருமாறு,
திரையன், திருமாலை முதல்வனாகக் கொண்ட குடி வழி வந்தவன். திரைதரு மரபின் வழி வந்தவன்.120 காஞ்சியைத் தலைநகராக் கொண்டு நாடாண்டவன்121 நீர்ப் பேர் எனும் பெயருடைய தொரு பேரூர் அவன் ஆட்சியில் இருந்தது.122 வேங்கட மலையும் அவன் ஆட்சிக்குட்பட்டதே. பூஞ்சோலை பல சூழ்ந்த பவத்திரி எனும் ஊரும் அவனுடையதே என்று அகநானூறு பாடல் எடுத்துரைக்கிறது. 123
திரையன் வரலாறு குறித்துப் பல கருத்துக்கள் நிலவுகின்றன. "நாகப்பட்டினத்துச் சோழனுக்கும் நாக கன்னிகைக்கும் பிறந்தவன். தொண்டையையே அடையாளமாகக் கட்டி தாயால் கடலிலே விடப்பட்டவன். திரை தருதலின் திரையன் எனப் பெயர் பெற்றான்" என்பார் நச்சினார்க்கினியர். அச் சோழன் கிள்ளி வளவனாவன்; நாககன்னி பீலிவளையாவள் என்று கொள்வர் சிலர்.
துரோணர் மகன் அசுவத்தாமனுக்கும்,மதனி என்ற அரமகள் ஒருத்திக்கும் பிறந்தவன். துரோணரின் தாய்,