155
57. நன்னன்சேய் நன்னன்
தொண்டை நாட்டு, பல்குன்றக் கோட்டத்துச் செங்கண்மா நகரில் இருந்து அரசாண்டவன் நன்னன் சேய் நன்னன், இவன் வேளிர் வழி வந்தவன், என்பது "வேள்" "மான விறல் வேள்" என அழைக்கப் பெறுதலால் உணரலாம்.126 இரணிய முட்டத்துப் பெருங்குன்றுார்ப் பெருங் கெளசிகனார் இயற்றிய மலைபடுகடாம் பாட்டின் தலைவன் இவன்.
இந் நன்னனின் தந்தையாகிய நன்னன் யாவன் என்பது குறித்து ஆராய்ச்சியாளரிடையே பல்வேறு கருத்துக்கள் நிலவுகின்றன. "நன்னன் சேய் நன்னனுக்குரிய பல்குன்றக்கோட்டம், ஏழிற்குன்றம் எனவும் வழங்கப் பெறும். ஆகவே, ஏழில் மலையைக் கொண்ட கொண்கான நாடாண்ட, பெண்கொலை புரிந்து பழி கொண்ட கொண்கானத்து நன்னனே, மலைபடுகடாம் பெற்ற நன்னனின் தந்தையாதல் வேண்டும்" எனக் கூறுவர் ஒருசாரார்.
"செங்கண்மா எனும் நகரம், கொண்கான நாட்டின் ஒரு பகுதியான சேலம் மாவட்டத்தையடுத்து உளது, எனவே அந்நகரமும், பல் குன்றக் கோட்டமும் கொண்கான நாட்டினைச் சேர்ந்திருத்தல் கூடும்: அதனால் செங்கண்மா நகரத்து நன்னனும், அவன் தந்தை நன்னனும், கொண்கான நாட்டு நன்னனின் வழி வந்தவராயிருக்கக் கூடும்" என்பார் சிலர்.
"மலை நாட்டின் ஒரு பகுதியான கொண்கானமும் நெடுந்துாரத்ததாகிய தொண்டை நாட்டு பல்குன்றக் கோட்டமும் ஓர் அரசனால் ஆளப்பட்டது எனக் கொள்வதில் ஐயம் உண்டாயிற்று. "பல்குன்றக்