உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தமிழக வரலாறு-சங்ககாலம்-அரசர்கள்.pdf/162

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

156

 கோட்டத்துச் செங்கண் மாத்துவேள்" என்னும் அடைமொழி, நன்னன் சேய் நன்னனை, கொண்கானத்து நன்னனின்றும் வேறுபடுத்திக் காட்டுவதற்காகவே கொடுத்தது போலத் தோன்றுகிறது" என மறுப்பர் வேறு சிலர்.

இதுவுமன்றி, நன்னன் உதியன், அருங்கடிப்பாழி' என்ற தொடரால் அறியப்படுவான் ஒருவன்127, "நன்னன் ஏற்றை" என்ற பெயரால் அறியப்படும் தலைவன் பிறிதொருவன்.128 பல்குன்றக் கோட்டத்து தலைவனான நன்னன்சேய் நன்னன், என நன்னன் என்ற பெயருடையார் மூவர் சங்க இலக்கியப் பாடல்களில் இடம் பெற்றுள்ளனர். இம்மூவரும் ஒருவரா, வேறு வேறானவரா என்பதை ஆராய்ச்சியாளர் பெரிதும் விழிப்புடன் ஆராய்ந்து அறிதல் வேண்டும்

"மலைபடு கடாத்தில், நன்னன் சேய் நன்னனுக்குக் கொடுக்கப்பட்டுள்ள 'வான விறல் வேள்' என்ற சிறப்பு அடைமொழியே, மதுரைக் காஞ்சியில்129, சேரமானுடைய படைத் தலைவருள் ஒருவனான அழும்பில் வேள் என்பானுக்கும் கொடுக்கப்பட்டிருப்பதால், நன்னன் சேய் நன்னன், சேரர் படைத் தலைவருள் ஒருவனாக இருந்திருக்கக் கூடும். அதனால் தான் அவன் நன்னன் உதியன் அருங்கடிப்பாழி 'நன்னன் ஏற்றை' போன்ற தொடர்களால் குறிக்கப்பட்டுள்ளான் என்று கூறி, மூவரும் ஒருவனே என்ற முடிவுக்கு வருவார் சிலர்.

"மானவிறல் வேள்" என்ற தொடர் 'வான விறல் வேள் என்று வானவரான சேரர் வெற்றிக்குரிய வேள் எனப் பொருள்படும் தொடரினும் வேறுபட்டது