உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தமிழக வரலாறு-சங்ககாலம்-அரசர்கள்.pdf/164

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

158

 நன்னன் சேய் நன்னன் நற்பண்பு பல பெற்றவன்132 பேராற்றல் பெற்றவன். பகைவரைப் புறங்கண்டு, அவர் பால் கவர்ந்து கொண்ட பெரும் பொருளைப் பாடி வரும் புலவர்களுக்கு வரையாது வழங்கியவன்.133

58. நன்னன் வேண்மான்

நன்னன் வேண்மான், வேளிர் குலத்தவன். கொண்கானம் நாட்டை ஆண்டவன், ஏழில், பாழி, பிரம்பு முதலிய மலைகளும் பாரம், பாழி, வியலூர் முதலிய ஊர்களும் அவனுக்கு உரியனவாம்.134 நன்னனுடைய பாழிப் பெரு நகர், பகைவர் அணுகு தற்கரிய காவல் செறிந்தது. அதனால். வேளிர் பலரும் தாம் அரிதின் ஈட்டிய பெரும் பொருளை ஆங்கு வைத்துப் போற்றிக் காத்தனர். 135

"நன்னன் உதியன் அருங்கடிப் பாழி" என்ற தொடரை வைத்து,136 உதியன் என்ற சேரரைக் குறிக்க வழங்கும் பெயர், நன்னன் பெயரோடு இணைந்து வழங்குவதாலும், நன்னனுக்குரிய கொண்கான நாடு, சேர நாட்டின் ஒரு பகுதியாகக் கொள்ளப்படுதலாலும், நன்னன் யாதோ ஒரு வகையால் அச் சேரரோடு உறவுடையவனாவன் என்று கொள்ளலாம். "நன்னன் ஏற்றை, நறும்புண் அத்தி,137 என்ற தொடரால் குறிக்கப் பெறும் நன்னன் என்பானொருவன் சேரர் படைத் தலைவனாய் விளங்கினான் எனத் தெரிகிறது; அந் நன்னனே இந்நன்னன் என்று சிலர் கூறுகின்றனர். சேரர் படையில் பணியாற்றிய ஒருவன், அச்சேரரரின் பகைவனாய்ப் பெருவாழ்வு வாழ்ந்தான் அவனை அழிக்க, அச்சேரர் அரும் போர்