163
ஒரு சிறைப் பெரியனார், கருவூர்க் கதப்பிள்ளை, ஒளவையார், மருதன் இளகாகனார் முதலாய புலவர் பெருமக்கள் அவன் வள்ளல் தன்மையைப் பாடிப் பெருமை செய்துள்ளனர். தன்னைப் புகழ்ந்து பாடிய ஒளவையார்க்கு, அவர் அருமை யுணர்ந்து, தன் பெருமை தோன்ற, பெரிய யானை ஒன்றைப் பரிசாக அளித்து மகிழ்ந்தான்.156
60. நாலை கிழவன் நாகன்
பாண்டிய நாட்டு நாலை எனும் நகர்க்குத் தலைவனாக விளங்கியவன் நாகன். இன்று அருப்புக் கோட்டைக்கருகே நாலூர் என வழங்கும் அந்நகர்த் தலைவனாக விளங்கிய நாலை கிழவன் நாகன் பெருவீரன். அறிவும் ஆற்றலும் ஒருங்கே வாய்ந்த நாகனின் திறன் அறிந்த, பாண்டிய அரசன், 'மண் பல தந்த திருவீழ் நுண்பூட் பாண்டியன்’ என்பான் நாகனைத் தன் படைத் தலைவனாக்கினான். (அப்பாண்டியன் நிலந்தரு திருவின் பாண்டியனாதலும் கூடும் என எண்ணுவாரும் உளர்)
ஆற்றல் பல பெற்ற நாகன், பரிசிலர் தம் பசித் துயர் போக்கும் பேருள்ளம் உடையவனாகவும் விளங்கினான்.157
61. நெடுமிடல்
நெடுமிடல் அஞ்சி எனப் பெயர் பெற்றவன். சேரமான் களங்காய்க் கண்ணி நார்முடிச் சேரலோடு. போரிட்டு வாழ்விழந்தவன்.158