பக்கம்:தமிழக வரலாறு-சங்ககாலம்-அரசர்கள்.pdf/170

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

164


62. நெடுவேளாதன்

சேரரோடு ஏதோ ஒரு வகையில் தொடர்புடையவன். ஆதன் என்ற சேரர் குடிப்பெயர் பெற்றவன். வேள் குடியில் வந்தவனாக இருக்கக் கூடும். நெல் நிறைந்த வயல்களையும், மலர்ச் சோலைகளையும், பொன் கொழிக்கும் தெருக்களையும் கொண்ட போந்தை எனும் நகரத்தின் தலைவனாக விளங்கியவன் நெடுவேளாதன் ஆவன்.159

63. நெடுவேளாவி

ஆவியர் குடித் தலைவன். யானைகள் நிறைந்த பொதினி மலைக்குரிமையுடையவன். பொன்வளம் செறிந்த பொதினி நகர்த் தலைவன். வேள் குடியில் வந்தவனாக இருக்கக்கூடும். முருகனைப் போன்ற வலிமையுடையான். மழவரை வென்று புகழ்க் கொண்டவன். 160

64. பண்ணி

இன்று கோடைக் கானல் என வழங்கப் பெறும் கோடைப் பொருப்பு எனப் பெயர் பூண்ட மலைச்சாரலில் கடியம் என்ற பகுதியின் தலைவனாக விளங்கியவன் பண்ணி. கோடைப் பொருநன் எனவும் அழைக்கப்பெற்றவன். வில்,அம்பு கொண்டு வேட்டையாடுவதிலும், நட்டு யானைகளைக் கைப்பற்றி வருவதிலும் வல்ல-