பக்கம்:தமிழக வரலாறு-சங்ககாலம்-அரசர்கள்.pdf/172

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

166


பழையனின் மோகூரைக் கைப்பற்றக் கருதி, அறுகை என்பான் படையெடுத்து வந்தான், அறுகையை வென்று துரத்தினான் பழையன். சேரன் செங்குட்டுவனின் நண்பனான அறுகை சேரநாடு சென்று தலை மறைந்து வாழலாயினன். நன்பனுக்கு உண்டான இழிவிற்குப் பழி தீர்க்க சேர மன்னன். மோகூரைத் தாக்கினான். வேளிர், வேந்தர் சிலர் துணை பெற்று பழையன் சேரனோடு போரிட்டான். படைவலி இழந்து தோற்றான். அவனுடைய காவல் மரமான வேம்பு, சேரனால் வெட்டி வீழ்த்தப் பெற்றது. அதைச் சிறுசிறு துண்டுகளாக்கி வீரமுரசு செய்வதற்கென சேரனாடு கொண்டு சென்றான் சேரவேந்தன்.165

வடநாட்டு மெளரியப் பேரரகப் படையொன்று. தமிழகத்தைத் தன்னடிப்படுத்தும் நோக்குடன், தென்னாடு நோக்கி வரலாயிற்று. அவர் தம் நெடிய தேர்ப் படைக்கு, வடவெல்லையில் வாழ்ந்த வடுகர் துணை புரிந்தனர். வந்த பெரும் படை பழையன் காக்கும் மோகூரை முற்றுகையிட்டது. மோகூர் பழையனுக்குத் துணையாகப் பாண்டியன் தன் படையை அனுப்பினான். பாண்டியர் படையிலிருந்த பேராண்மையுடைய கோசர் துணையோடு பழையன், மோரியர் தம்,தேர்ப்படையை வென்று துரத்தினான். வெற்றி வீரனாய் புகழ்பெற்றான். 166

66. பாணன்

தமிழகத்தின் வடவெல்லைப் பகுதியில் வாழ்ந்திருந்த தலைவன். பகைவரை வென்று அவர் தம் ஆனிரைகளைக் கவர்ந்து வருவதில் வல்லவன். ஆற்றல் வாய்ந்த வேற்படையுடையவன்167 மற்போர் புரிவதில்