167
வல்ல மல்லன். தன் ஆற்றலைக் காட்ட, வாய்ப்பை எதிர் நோக்கி, சேரர் படையில் பணியாற்றிய கட்டி என்பானின் துணை நாடி நின்றான். சேரர் படைத் தலைவனான கணையன் என்பான் ஆதரவில் மற்றொரு ஆற்றல் மிக்க வட புலத்து மல்லனான ஆரியப் பொருநன் வாழ்ந்திருந்தான். பாணன் ஆரியப் பொருநனோடு மற்போர் புரிய எண்ணினான். மற்போரில் ஆரியப் பொருநனை, தோள்களை முறித்துக் கொன்று வெற்றி பெற்றான் பாணன்168
பாணனின் ஆற்றல் கண்டு உவகை கொண்ட கட்டி, அவனோடு உறையூர் சென்றான். உறையூரை ஆண்டிருந்த தித்தன் வெளியன் என்பானை வென்று ஆட்சியைக் கைப்பற்ற கட்டி திட்டமிட்டான். ஆனால் உறையூர், நாளவையில் தித்தன் வெளியனின் ஆற்றலைப் புகழ்ந்து பாணரும், மக்களும் கூறும் மொழி கேட்டு, அஞ்சி கட்டி, பாணனோடு உறையூரை விட்டே ஓடி மறைந்தான்169
67. பிடவூர் கிழான் மகன் பெருஞ்சாத்தன்
சோழ நாட்டில், உறையூர்க்குக் கீழ் பால் அமைந்த பிடவூர், வளஞ்செறிந்த வயல்கள் சூழப் பெற்றது.170 அவ்வூரில் மாசாத்தனார் கோயில் ஒன்றும் உள்ளது. அச் சாத்தனார் பெயரே பிடவூர் தலைவன் மகனுக்கும் பெயராயிற்று. வேளாளர் வழி வந்தோன்.
பிடவூர் பெருஞ்சாத்தன் புலவர் போற்றும் வள்ளலாக வாழ்ந்தான். பெரும் புலவர் நக்கீரர், அவன் வள்ளல் தன்மையைப் பாராட்டி , அவனை 'அறப்பெயர்ச் சாத்தன்' என பெயரிட்டு சிறப்பித்துள்ளார்.171