169
69. பிண்டன்
குறும்பர்குடித் தலைவருள் ஒருவன். பாழி நகர் அரசனான நன்னன் போன்ற அரசர்க்கும், அவர் நாட்டு குடிகளுக்கும் கேடு விளைவித்து வாழ்ந்தவன். அவன் திறன் அழிக்க நன்னன் பெரும்படை கொண்டு சென்று, தன் வேற்படை வலிமையால் பிண்டனின் ஆற்றலை அழித்துப் புகழ் பெற்றான். 180
70. புல்லி
தமிழ் நாட்டின் வடவெல்லையில், வேங்கட மலையையும் அதைச் சூழ்ந்த பகுதியையும் ஆண்ட தலைவன் புல்லி வேங்கட மலைக்கு வடக்கே வாழ்ந்த வடுகு மொழி பேசிய வடுகர் தாக்குதனின்றும் தமிழகத்தைக் காத்து நின்றவன்.181 கள்வர் இனத் தலைவன்,182 கள்வர் இனம், களப்பாளர் இனத்தையே குறிக்கும் என்பர் சிலர். தென்னவர் எனச் சிறப்பிக்கப்படும் பாண்டியர் கள்வர் தலைவராவர் எனவும், பாண்டியர் தம் படையணிக்குத் தேவையான யானைகளை கள்வர் கோமான் புல்லியின் வேங்கடத்தினின்றே பெற்றனர் எனவும், கூறப்படுவதால் 183 புல்லி, யாதோ ஒரு வகையால், பாண்டியர் குடியோடு தொடர்புடையனாதல் வேண்டும் எனக் கொள்ளலாம்.
வேழங்கள் மலிந்த வேங்கட நாடாண்ட புல்லி நாளவைக்கண் தன்னைப் பாடி வரும் பரிசிலர்க்கு யானைத் தந்தங்களைப் பரிசிலாக அளிப்பன்.184 அவன் நாட்டு ஆயர், தம் நாடு கோக்கி வருவாரை விருந்தேற்றுப் போற்றும் அன்புடையராக விளங்கினர்.185