பக்கம்:தமிழக வரலாறு-சங்ககாலம்-அரசர்கள்.pdf/178

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

172

படைத் தலைவன் பழையன் பட்டது கேட்டுப் பொங்கி எழுந்தான் சோழ மன்னன். பழையனைக் கொன்றவரைப் பழி வாங்கக் களம் புகுந்தான். சேரமான் கனைக்கால் இரும்பொறையைப் போரில் வென்று. சிறைபிடித்துக் கொண்டு வந்து குடவாயிற் கோட்டத்தில் சிறை வைத்து பழி துடைத்தான்194

75. மத்தி

காவிரி கடலோடு கலக்குமிடத்தே அமைந்த கழார் என்ற நகரத்தின் தலைவன் மத்தி பரதவர் கோமான்195 சோழர் படை தலைவருள் ஒருவன். சோழ அரசன் யானை வேட்டைக்குச் சென்றபோது அவனுக்குத் துணை புரிய மறுத்தான், எழினி என்பான். சினங் கொண்ட சோழனின் ஏவலால், படை கொண்டு சென்ற மத்தி, அவ்வெழினியை வென்றான். அவன் பல்லைப் பறித்து வெண்மணி வாயிற் கதவில் பதித்தான். அவ்வெற்றிக்கு அறிகுறியாக வெண்மணியில் உண்ணு நீர்த் துறையொன்றை அமைத்தான்196 மத்தியின் பெருமையினையும், வெற்றியினையும் ஓரம் போகியார், பரணர், மாமூலனார் ஆகிய புலவர்கள் பாராட்டியுள்ளனர்.

76. மலையமான் சோழிய
ஏனாதி திருக்கண்ணன்

திருக்கோவலூர் மலையமான் திருமுடிக்காரியின் மகனே திருக்கண்ணன் என்பாரும் உளர். சோழ அரசில் சிறந்து பணியாற்றியமையால் ‘சோழிய ஏனாதி’ என்ற ட்டத்தைப் பெற்றவன், சோழ அரசில் ஏற்பட்ட