175
80. முசுண்டை
வேம்பி எனும் நகர்த் தலைவன் முசுண்டை. வேற்படை வீரன். கொடை வள்ளலாய் வாழ்ந்தவன். பாடி வரும் பாணர்களுக்கு, அறுசுவை உணவளித்து, அவர் மகிழ, கொம்புகளில் பொன்னாலான பூண்களும். கழுத்தில் பொன்னரி மாலையும் கொண்ட காளைகள் பூட்டிய பெற்றேர்களை பரிசிலாக அளிப்பவன் எனப் புகழ் பெற்ற கொடை வளம் கொண்டவன்.202
81. முடியன்
மூங்கில் நிறைந்த மலை நாட்டுத் தலைவன். மலை போல் உயர்ந்த யானைகளைக் கொண்ட படையுடையவன் வாய்மை வழுவாது வாழ்ந்தவன்.203
82. மூவன்
நெய்தல் நிலத்தைச் சார்ந்த, மருதவளம் நிறைந்த நாட்டுக்கு உரியவன் மூவன். வளம் நிறைந்த நாட்டைப் பெற்றிருந்தும், பரிசில் வேண்டி வருவார்க்கு வழங்கி வாழும் மனமில்லாதவன்.அவன் பால் பரிசில் பெறுவான் வேண்டிச் சென்ற புலவர் பெருந்தலைச் சாத்தனார் தம் பெருமையறியாது அவர்க்கு பரிசில் அளிக்காது அவரை மனம் வருந்தச் செய்தவன்.204
இவனையன்றி, புலவர்பொய்கையார் பாடல் வழி, மற்றுமொரு மூவன் என்பானை அறிகிறோம். அம்மூவன் பொறையன் என்ற சேர மன்னனுக்குப் பகைவனாக விளங்கியவன். பொறையன் அந்த மூவனைப்