பக்கம்:தமிழக வரலாறு-சங்ககாலம்-அரசர்கள்.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

13

தும், அவர் கைகளைப் பின் கட்டாகக் கட்டியும், இழிவு செய்ததோடு, அவரிடமிருந்து விலைமதிக்கவொண்ணா அணிகலன்களையும், வயிரங்களையு ம் வாரிக் கொணர்ந்து தன்னைப் பாடிய பாணர், கூத்தர்களுக்கு வழங்கினான்.15

இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன் பெற்ற மற்றொரு பெரிய வெற்றி, கடலிடையே உள்ள தீவு ஒன்றைத் தம் வாழிடமாகக் கொண்டிருந்த பகைவர் மீது கப்பற் படையின் துணை கொண்டு சென்று, அவரையும் வென்று அவர் காவல் மரமாம் கடம்பையும் வெட்டி வீழ்த்தி, அக்கடம்பால் முரசு செய்து முழக்கியதே ஆம்.16

நெடுஞ்சேரலாதன், அறம் கூறும் ஆன்றோர்களை என்றும் பிரியான். பகைவர் பணிந்து வந்து திறை தந்தால், அவர் பிழை பொறுத்து அவரை வாழவிடுவன், வருவார்க்கு வாரி வழங்கும் வள்ளலும் ஆவன்.17 அவனைப் பாடிய புலவர்கள், பரணர், மாமூலனார், குமட்டுர்க் கண்ணனார் ஆகியோர்களில், ஈற்றில் கூறியவர்க்குத் தன் ஆட்சிக்கு உட்பட்ட உம்பற்காடு எனும் பகுதியில் உள்ள ஐந்நூறு ஊர்களையும், தென்னாட்டினின்றும் வரும் வருவாயில் ஒரு பாகத்தையும் கொடுத்தான், இமயவரம்பன் ஐம்பத்தெட்டு ஆண்டு வாழ்ந்திருந்தான்.

இனி, திருப்போர்ப்புறம் எனும் இடத்தே, சோழன் வேற்பஃறடக்கைப் பெருவிறற் கிள்ளியொடு, போரிட்டு அவனோடு ஒருங்கே உயிரிழந்த சேரமான் குடக்கோ நெடுஞ்சேரலாதன் என்பானொரு சேரவேந்தன் புறநானுாற்றில் கூறப்பட்டுள்ளான். அவர் இருவரும் இறந்து கிடந்த காட்சியைக் கண்டு கண்ணிர் விட்டுக்