உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தமிழக வரலாறு-சங்ககாலம்-அரசர்கள்.pdf/195

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

189

மறவர் மரபினரே கொங்கர் ஆவர். கொங்கர் வாழ்ந்த நாடு கொங்கு நாடு என அழைக்கப் பெற்றது. இன்றைய கோவை, பெரியார் மாவட்டங்கள், சேலம் மாவட்டத்தின் தென்பகுதியும் கொண்டது கொங்கு நாடு.

கொங்கர் ஆனிரை போற்றும் அருந்தொழில் மேற்கொண்டு வாழ்ந்த மரபினர். அவ்வானிரைகட்கு நீரளித்து ஓம்புவான் வேண்டி ஆழ்ந்த பல கிணறுகளை ஆங்காங்கே தோண்டி வைப்பர்!1 ஆனிரைச் செல்வம் பேணிய கொங்கர் ஆற்றல் மிக்க வீரர்களாகவும் விளங்கினர். வாட்போரில் வல்லவர்கள், பகைவர் தம் பேரரண்களைப் பாழ் படுத்துமாறு, பெருங்கற்களை எறிய வல்ல ‘கல்கால் கவணை’ எனும் பொறிகளை பயன்படுத்தும் திறனுடையவர்.2

வீரம் மிக்க கொங்கர் மரபினரின் திறன் அடக்கவும், அவர் தம் கொங்கு நாட்டைக் கைப்பற்றவும் மூவேந்தரும் ஆர்வம் மிக்கவராயினர். சேர மன்னன் பல்யானைச் செல்கெழுகுட்டுவன் கொங்கரை வென்று கொங்கு நாட்டைத் தன்னாட்டோடு இணைத்துக் கொண்டான்3 அதையடுத்து கொங்கு நாடு சேர நாட்டின் ஒரு பகுதியாகவே கருதப்பெறலாயிற்று. சேர மன்னர்களும் ‘கொங்கர்கோ’ எனும் சிறப்புப் பெயர் பெறலாயினர். சேரமன்னன் இளஞ்சேரல் இரும்பொறையை ‘கொங்கர்கோ’ எனப் புலவர்கள் பாராட்டியுள்ளனர்4

சோழ மன்னன் கிள்ளிவளவன் கொங்கரை வென்றான் என புலவர்கள் புகழ்ந்துரைத்துள்ளனர்5 செங்கணான் எனவும், பெரும்பூட் சென்னி எனவும் அழைக்கப் பெறும் சோழ மன்னனின் படைத்தலை-