190
வனான போரூர் பழையன் என்பான் கொங்கரை வென்று சோழர்க்கு புகழ் சேர்த்தான்.6 கழுமலம் என்னும் இடத்திலே சோழன் செங்கணான் படைக்குத் தலைமை தாங்கிய பழையன், சோழரை எதிர்த்த சேரமான் கணைக்கால் இரும்பொறையையும், சேரர்க்குத் துணையாக வந்த கொங்கரையும், சேரர் படைத்தலைவர் அறுவரையும் வென்றான். இறுதியில் கொங்கர் படையால் களத்தில் மாண்டான். சோழன் செங்கணான் வீறு கொண்டு எழுந்து, படைத்தலைவன் பழையனைப் பாழ் செய்த அக்கொங்குப் படையையும், கொன்றுகுவித்து, சேரமான் கணைக்கால் இரும்பொறையையும் கையப்படுத்தி குடவாயிற் கோட்டத்தில் சிறைவைத்தான்.
பாண்டிய நாட்டு எல்லையில் வாழ்ந்த கொங்கரால் பாண்டிய அரசுக்கு தீங்கு வரக்கூடுமென அஞ்சிய பாண்டியன், பசும் பூண் பாண்டியன் என அழைக்கப்பெறும் தலையாலங்கானத்துச் செரு வென்ற நெடுஞ்செழியன், கொங்கரை அழிக்க, அவர் அண்மையில் இருந்த தன் படைத்தலைவன் அதியன் என்பானைப் போக்கினான். அதியன், கொங்கு நாட்டின் மீது படை கொண்டு சென்று, கொங்கரை வென்றான்.8
இவ்வாறு கொங்கரை வென்று விரட்டிய அதிகன் பின்னாளில் வாகையெனும் இடத்தே நடந்த போரில் கொல்லப்பட்டான். அதை அறிந்த கொங்கர் உள்ளம் உவந்தனர்.9
குறுநில மன்னனாகவும், கடையெழு வள்ளல்களில் ஒருவனாகவும் விளங்கிய ஆய் அண்டிரன், கொங்கரை வென்று, அவர்கள் தம்முடைய படைக்கருவிகளை