உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தமிழக வரலாறு-சங்ககாலம்-அரசர்கள்.pdf/197

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

191

களத்திலேயே போட்டு விட்டு, மேலைக் கடல் நோக்கி ஓடி ஒளியுமாறு துரத்தினான்.10

இவ்வாறு, வேந்தர் பலருடைய பகைக்கு ஆளாகி வருத்தப் பெற்றாலும், கொங்கர் இனம் அழிந்துவிடாது தொடர்ந்து தமிழகத்தில் கொங்குவேளிர், கொங்குதேச ராசாக்கள் என்றெல்லாம் பெயர் பெற்று வாழ்ந்திருந்தது.


2. கோசர்

வடபுலத்தில், மௌரியப் பேரரசன் அசோகன் ஆட்சி செய்த காலத்தில், தென்னிந்தியாவில் அரசோச்சிய அரச இனங்கள் நான்கனுள் சத்ய புத்ரன் இனமும் ஒன்று. இச் சத்ய புத்ரரே, ‘வாய்மொழி வழுவாதவர்’ எனச் சங்க இலக்கியங்களில் போற்றப்படும், கோசராவர்”11 என வரலாற்று நூலாசிரியர் கருதுகின்றனர்.

கோசர்கள் வாழ்ந்த வாழ்விடம் துளு நாடு என இலக்கியங்களால் அறிகிறோம்.12 கேரளநாட்டிற்கும், துளு நாட்டிற்கும் எல்லையாக அமைந்த சந்திரகிரி எனும் நாடே சத்யபுத்ரர் நாடு எனவும் வரலாற்று நூலாசிரியர் கூறுவர். அவர்கள் கொங்கிளங் கோசர் எனவும் அழைக்கப் பெறுவதால், கோசர் ஆட்சி கொங்கர் நாட்டிலும் செயல்பட்டிருந்திருக்கக் கூடும் என்பது புலனாகிறது.

தாயகமாம் துளு நாட்டை விட்டுக் கோசர் நாளடைவில் கிழக்கே சென்று வாழத் தொடங்கினர். கீழ்க் கடலையொட்டி, ஆதனெழினி என்பான் ஆண்ட