உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தமிழக வரலாறு-சங்ககாலம்-அரசர்கள்.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

14

கலங்கியுள்ளனர் பரணரும்.18 கழாத்தலையாரும்.19 இமயவரம்பன் நெடுஞ்சேரலாதனைக் குறிக்க வழங்கும் பெயர்களுள், “குடக்கோ நெடுஞ்சேரலாதன்”20என்பதும் ஒன்று, ஆதலாலும், சோழன் வேற்பஃறடக்கைப் பெருவிறற்கிள்ளியொடு பொருது வீழந்தான் பெயரும் குடக்கோ நெடுஞ்சேரலாதன் என்றே கூறப்பட்டுள்ளது ஆதலாலும். குடக்கோ நெடுஞ்சேரலாதனும், வேற்பஃறடக்கை பெருவிறற்கிள்ளியும் இறந்து வீழ்ந்திருப்பது கண்டு இரங்கிப் பாடிய புலவர்களுள் ஒருவராகிய பரணர், இமயத்தே விற்பொறித்த நெடுஞ்சேரலாதனையும் பாடியுள்ளார்,21 ஆதலாலும், வேற்பஃறடக்கைப் பெருவிறற்கிள்ளியோடு போரிட்டு உயிர் துறந்தவன், இமயவரம்பன் நெடுஞ்சேரலாதனே எனக் கோடல் பொருந்தும் கொல்?

பல்யானைச் செல்கெழுகுட்டுவன்

பெருஞ்சோற்றுதியன் சேரலாதனுக்கும் வெளியன் வேண்மான் மகள் நல்லினிக்கும் மகனாய்ப் பிறந்தவன் இவன். இமயவரம்பன் நெடுஞ்சேரலாதனை உடன் புறந்தவனாகக் கொண்டவன். பகைவர்களின் பற்றற்கரிய அரண்களை அழிக்கும் ஆற்றல் வாய்ந்த வேழப்படையைப் பெற்றிருந்தவன்.

வேழங்கள் மலிந்த உம்பற்காட்டை வென்று கைக்கொண்டவன்,22 அகப்பா எனும் பற்றற்கரிய அரணைக் கைப்பற்றியவன்.23 வேந்தர் இருவர் வேளிர்களை ஒரே களத்தில் வெற்றி கொண்டவன்.24 ஆனிரைச் செல்வமும், பொன் கொழிக்கும் நிலவளமும் கொண்ட பூழியர்களை வென்றவன்.25 குதிரைப்படை வல்ல