உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தமிழக வரலாறு-சங்ககாலம்-அரசர்கள்.pdf/204

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

198

 "உழுவித் துண்போர், மண்டிமாக்களும், தண்டத் தலைவருமாய்ச் சோழ நாட்டுப் பிடவூரும். அழுந்துாரும் நாங்கூரும், நாவூரும், ஆலஞ்சேரியும், பெருஞ்சிக்கலும். வல்லமும், கிழாரும், முதலிய பகுதியில் தோன்றி. வேள் எனவும், அரசு எனவும் உரிமை எய்தினோரும், முடியுடை வேந்தர்க்கு மகட் கொடைக்குரிய வேளாளர்' குடியே வேளிர் மரபு. 44

சோழ மன்னன் உருவப் பஃறேர் இளஞ் சேட் சென்னி அழுந்நூர் வேள் மகனை மணந்திருந்தான் என்பதும், அவன் மகனான சோழப் பேரரசன் கரிகாற் பெருவளத்தான் மனைவி, நாங்கூர் வேள் என்பானின் மகள் என்பதும், சோழ மன்னர்கட்கு மகட் கொடை அளித்த பெருமைக்குரியவர் வேளிர் மரபினர் என்பதை உறுதி செய்யும்.

வான வரம்பன் வெளியம்45. என அழைக்கப்படும் சேர நாட்டு வெளியம் நகர்க் கண் வேளிர்மரபினர் வாழ்ந்திருந்தனர். அவர்கள் வெளியன் வேண்மான் என்று அழைக்கபெற்றனர்46 அவ் வேளிர் மரபினர் சேர வேந்தர்க்கு மகள் கொடுக்கும் குடியினராக விளங்கினர்.

சேர மரபின் முன்னோனான உதியன் சேரலாதன், வெளியன் வேண்மான் எனும் வேளிர் குலத் தலைவன் மகளான நல்லினி என்பாரை மணந்திருந்தான்47 என்பதும், அவன் மகனான இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன், வேளிர் மரபினனான, வேளாவிக் கோமான் பதுமன் மகளை மணம் முடிந்திருந்தான் என்பதும்,48 அவ் வேளிர் மகள் வயிற்றுப் பிறந்தோரே சேர மன்னர்களான, களங்காய்க் கண்ணி நார் முடிச்சேரல்,49 ஆடு கோட்பாட்டுச் சேரலாதன்50 ஆகியோர் என்ற வரலாற்று உண்மையும், இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன் மகனான, கடல் பிறக்கோட்டிய