199
செங்குட்டுவன் அரசியான, இளங்கோ வேண்மாள் வேளிர் குலப் பெண்ணரசு என்பதும், குட்டுவன் இரும்பொறை என்னும் சேரமன்னன், மையூர் கிழான் வேண்மான் என்ற வேளிர் மரபினனின் மகள் அந்துவஞ் செள்ளை என்பாரை மணந்திருந்தான் என்பதும், அவர்க்குப் பிறந்த மகனே சேரன் இளஞ்சேரல் இரும்பொறை என்பதும்,51 சேர அரச மரபினருக்கும் வேளிர் மரபினருக்கும் இடையே நிலவிய உறவு முறைக்கு சான்று பகருகின்றன.
பெருங்கொடை வள்ளல்களாகவும், மன்னர்களாகவும் விளங்கிய ஆய் அண்டிரன்,52 பறம்புமலைத் தலைவன் பாரி;53.வையாவிக் கோப் பெரும் பேகன்54, ஆகியோர் வேளிர் குடி வந்தவர்களே.
மலைபடு கடாம் பாட்டுடைத் தலைவனான நன்னன் சேய் நன்னன்,55மிழிலை நகர்த் தலைவன் எவ்வி56, வாட்டாற்று எழினியாதன் 57, வேளிர் தம் பெரும் பொருளைத் தன் பாழிநகர் அரணில் வைத்துக் காத்த நன்னன் வேண்மான்58 அரையம் என்ற பேரூர்த் தலைவனான புலி கடி மால் என்றழைக்கப்பட்ட இருங்கோ வேள்,59 இளவிச்சிக்கோ,60 வெளிமான்,61 இளவெளிமான்62, பிடவூர் கிழார் வேண்மாள்,63 வெளியன் வேண்மான். ஆய் எயினன் 64 நெடுவேள் ஆவி, நெடு வேளாதன், அழும்பில் வேள்65 போன்ற வேளிர் மரபினர் குறுநில மன்னர்களாகவும் படைத் தலைவர்களாகவும் விளங்கித் தம் குடிக்கு பெருமை சேர்த்தனர்.
தலையாலங் கானத்துப் போர்க்களத்தில் பாண்டியன் நெடுஞ்செழியனால் அழிக்கப்பட்ட எழுவரில் இருங்கோ வேண்மான் என்ற வேளிர் மரபினனும் ஒருவன், 66 சோழன் கரிகாற் பெருவளத்-