15
மழவர்களையும் வென்றவன்.26 கொங்கு நாட்டை வென்றவன்;27தன் யானைகளை ஒரே காலத்தில் மேலைக்கடலுக்கும், கீழைக்கடலுக்கும் போக்கி, அவை கொணர்ந்த இருகடல் நீரில் ஆடியவன்,28 அயிரைமலையில் கோயில் கொண்டிருக்கும் கொற்றவையை வழிபட்டவன், சிறந்த கொடையாளி, தன்னைப் பாடிய புலவர், பாலைக்கெளதமனார் வேண்ட பத்துப் பெருவேள்விகள் செய்து, அவரையும், அவர் மனைவியையும் பிறவாப் பெருநெறியில் இருத்தியவன்,29 இவ்வாறு வாழ்வாங்கு வாழ்ந்து உயர்ந்த செங்குட்டுவன், இருபத்தைந்து ஆண்டு ஆட்சி புரிந்த பின்னர் நெடும்பாரதாயனார் வழிகாட்ட, நாடுவிட்டு, காடடைந்து கடுந்தவம் மேற்கொண்டு வீடுபேறு அடைந்தான்.30
கடல் பிறக்கோட்டிய செங்குட்டுவன்
செங்குட்டுவன் தந்தையைப் பெற்ற பாட்டன் பெருஞ்சோற்றுதியன் சேரலாதன், பாட்டி, வெளியன் வேண்மாள் நல்லினி, தந்தை, இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன், தாய், சோழன் மணக்கிள்ளி மகள் நற்சோணை; உடன் பிறந்தவர், இளங்கோவடிகளார், மனைவி இளங்கோ வேண்மாள்; மகன் குட்டுவஞ்சேரல், சிறிய தந்தை, பல்யானைச் செல்கெழுகுட்டுவன்; மாற்றாந்தாய் வேளாவிக்கோமான் பதுமன் மகள்; மாற்றாந்தாய் வழி வந்த உடன் பிறப்பாளர்கள், களங்காய்க் கண்ணி நார் முடிச்சேரலும், ஆடுகோட்பாட்டுச் சேரலாதனும் ஆவர்.
இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன், பேரத்தாணிக்கண் இருந்தபோது, ஒருநாள் நிமித்திகன்