பக்கம்:தமிழக வரலாறு-சங்ககாலம்-அரசர்கள்.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

18

கத்து வடக்கு எல்லைக்கு அப்பால் உள்ள தண்டாரணியம் என்ற காட்டில் வாழும் கொள்ளையர், சேரர் நாடு புகுந்து, ஆங்குள்ளார்க்குரிய ஆட்டு மந்தைகளைக் கவர்ந்து சென்றமை அறிந்து, அக்காடு புகுந்து, அக்கொள்ளையரை வென்று, ஆட்டு மந்தையை மீட்டுக் கொணர்ந்து அப்புகழால் பெயர் பெற்றவன் இவன்.43

அந்துவஞ்சேரல் இரும்பொறை

சேரருள் ஒரு பிரிவினராய இரும்பொறை மரபில் வந்தவன். கருவூரிலிருந்து ஆட்சி புரிந்தவன். முடித்தலைக்கோப் பெரு நற்கிள்ளி இவனோடு பகைகொண்டு இவன் தலைநகராம் கருவூரை முற்றுகையிட்டிருந்தான்; ஒரு நாள், களிறு மீது அமர்ந்து தனியே சேரர் படை வரிசையுள் புகுந்துவிட்டான் கிள்ளி. அது அறிந்த புலவர், உறையூர் ஏணிச்சேரிமுட மோசியார், தனித்து வந்தானுக்கு கேடுவிளைத்தல் போர் அறமாகாதே என எண்ணி, அவனுக்கு ஊறு ஏதும் நிகழாவாறு, காக்குமாறு இரும்பொறையை வேண்டிக் கொண்டதாகப் புறநானூற்றுப் பாடல் ஒன்று44கூறுகிறது. இவனைப் பற்றி அறியக் கூடியன இவ்வளவே.

செல்வக் கடுங்கோ வாழியாதன்

வேளாவிக் கோமான் பதுமன் என்பான் மகளிர் இருவருள் மூத்தாளை இமயவரம்பன் மணந்து கொள்ள, இளையாளை மணந்து கொண்டவன் செல்வக் கடுங்கோ. தகடூர் எறிந்த பெருஞ்சேரல் இரும்பொறை இவன் மகன். செல்வக்கடுங்கோவைப் பாடிய புலவர்கள் கபிலரும், குன்றுகண் பாலியாதனாரும், வள்ளல் பாரி இறந்த