பக்கம்:தமிழக வரலாறு-சங்ககாலம்-அரசர்கள்.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

19

பின், அவன் போலும் கொடையாளி இவன் என அறிந்து இவன்பால் வந்தவர், அவனிடம் நூறு ஆயிரம் காணப் பொன்னும், நன்றா எனும் குன்றின் மீது ஏறி நின்று அங்கிருந்து காணக்கூடிய நாடுகளையும் நன்கொடையாக அவன் அளிக்கப் பெற்றார்.

அவன், ஆற்றல் எல்லாம் பொதுவகையாகப் பாடப்பட்டுள்ளனவே அல்லது, குறிப்பிட்ட வெற்றி எதுவும் கூறப்படவில்லை.

தகடூர் எறிந்த பெருஞ்சேரல் இரும்பொறை

செல்வக்கடுங்கோ வாழியாதன் இவன் தந்தை. வேளாவிக் கோமான் பதுமன் என்பானின் இளையமகள் இவன் தாய். இவன் போர்க்களம் பல கண்டவன் என்றாலும் அவனுக்குப் பெருமை சேர்த்தது, தகடூர்க்கண் அவன் பெற்ற வெற்றியே.

இக்காலத்தில், தர்மபுரி என வழங்கும் தகடூரை ஆண்டிருந்தனர் அதியர் என்ற இனத்தவர். தகடூர் சேரநாட்டின் ஒரு பகுதியே. இவன் காலத்தில் அஞ்சி என்பான் தகடூரை ஆண்டு கொண்டிருந்தான். தகடூர்க் கோட்டை எளிதில் அழிக்கலாகாத் திண்மை உடையது. அத்தகைய கோட்டையை அழித்தமையால், இவன் இப்பெயர் பெற்றான.45 அவன் பெற்ற மற்றோர் வெற்றி, கழுவுள் என்னும் பெயருடைய ஆயர் குலத்தவனை வென்றது.46

அவன் வெற்றிக்குப் பெருமை சேர்த்தது. தகடூர் வெற்றி என்றால், அவன் கொடைக்குப் பெருமை சேர்த்தது, அவன் மோசிகீரனார்க்கு முரசு கட்டில் வழங்கியது இவனைப் பாடிப்பரிசில் பெற வந்த புலவர் மோசிகீரனார்