உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தமிழக வரலாறு-சங்ககாலம்-அரசர்கள்.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

21

 இவனைப் பனிரெண்டு பாடல்களால், பெருங்குன்றுார்க்கிழார் பாராட்டியுள்ளார் என்றாலும், அவையெல்லாம் அவன் கொற்றம் கொடைவளங்களைப் பொதுவாகப் பாடியுள்ளனவே ஒழிய, எதையும் குறிப்பிட்டுக் கூறவில்லை.


கருவூர் ஏறிய ஒள்வாட் கோப்பெருஞ்சேரல்
இரும்பொறை

இரும்பொறை மரபினர்க்குரிய, தொண்டி, மாந்தை, முதலாம் கடற்கரை நாட்டை ஆண்டதொடு, சேரருள் மற்றொரு கிளையினர்க்குரிய கொங்கு நாட்டுக்கருவூரையும் கைப்பற்றி ஆண்டவன். யானைகள் நிறைந்த காட்டு நாட்டிற்கு உரியவன். "குடிமக்கள்பால் அன்பும் அருளும் உடையையாகிக் குழந்தையைப் பேணும் தாய் போல், நாடாள்வாயாக" என நரிவெரூஉத் தலையார் என்ற புலவரால் பாடப்பெற்றவன்.50


குட்டுவன் கோதை

குட்டநாட்டை ஆண்டவன்,'கோதை' எனும் பெயர் உடையவன், "அவன் அவைக்குள் புலவர்கள் புகுதல் எளிது; அவன் பமைவர்க்குப் புலிவாழும் காட்டுள், இடையர் உட்புக அஞ்சுவதுபோல், அஞ்சத் தக்கது அவன் அவை" என எறிச்சிலுர்மாடலன் மதுரைக்குமரனாரால் பாடப்பெற்றவன்51
2