24
தோல்விக்குக் காரணம் நல்ல படைத்துணை இல்லை என்பதை உணர்ந்து, கபிலர் இருந்திருந்தால் தேர்வணமலையன் துணை தனக்குக் கிடைத்திருக்கும், அந்தோ! அவர் இல்லையே என எண்ணி எண்ணி, வருந்தினான்.61
ஒரு நாள் விண்மீன் விழக்கண்ட புலவர் கடலூர்க் கிழார், அந்த நிமித்தத்தால் யாருக்கு என்ன கேடு நேருமோ என அஞ்சியிருந்தபோது. அதுகண்ட ஏழாம் நாள் இரும்பொறை இறந்துவிட்டான். அதுகேட்டு, வருந்தினார் புலவர்62
வஞ்சன்
குடகு நாட்டின் ஒரு பகுதியாகிய, இப்போது வயநாடு என அழைக்கப்பெறும் பாயல் நாட்டை ஆண்டவன்; பகைவர்க்குப் புக இயலாத காவலும், புலவர், இரவலர், போல்வார்க்குத் திறந்து விடும் வாயிலும் உடைய அரணுக்கு உரியவன். இவனைப் பாடிய புலவர் திருத்தாமனார்!63
புலவர்கள். பாவல காவலர்
புலவர்கள் பாடல்களால் அறியப்பட்ட சேர அரசர்கள் வரலாற்றை இதுவரை கண்டோம். இனி, தம் பாடல்களால், தம் வரலாறுகளைக் உணர்த்திய சேரர்களைக் காண்போம். அவர்கள் ஒன்பதின்மர்.