பக்கம்:தமிழக வரலாறு-சங்ககாலம்-அரசர்கள்.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

25


இளங்குட்டுவன்

காதலனுடன் சென்றுவிட்ட மகளை நினைந்து செவிலித்தாய் வருந்துவதாக அமைந்த ஒரு பாட்டில், எப்போதும் இனிய சொற்களைக் கூறும் தோழிய சிறிது பொழுது பந்தாடினும், கன்றிப்போகும் மென்மையான காலுடையளாய் இருந்தும், வெயில் காயும் காட்டில் மூங்கில்கள் தீப்பிடித்துக் கொள்வதால்,மேலும் வெப்பம் மிகுந்த வழியில் கணவனோடு செல்லும் தலைவி, அவள் நிலையறிந்து வருந்தும் அன்புத் தாய் ஆகியோர்களைப் படம்பிடித்துக் காட்டி உள்ளார். 64

எந்தை

தலைவன் பொருள்வயிற் பிரியக் கருதியுள்ளான், என்பதை அவன் செயற் குறிப்பால் அறிந்து கொண்டு வருந்தும் தலைவியை, அழகிய முகத்தளாய உன்னை விட்டுப் பிரியும் உள்ளம் யாருக்கு வரும்? எனக் கேட்பதன் மூலம் பிரியான் தலைவன் எனத் தோழி ஆறுதல் கூறும் அழகிய பாட்டொன்றைப் பாடியுள்ளார் புலவர் எந்தை65

கணைக்கால் இரும்பொறை

தன்னைப் பணிய மறுத்த மூவன் என்பானை வென்று அவன் பற்களைப் பிடுங்கிக் கொணர்ந்து பொறுத்திய வாயிற் கதவுகளைக் கொண்ட தொண்டி நகரைத் தலைநகராகக் கொண்டு ஆண்டவன், தம் வீரர் அஞ்ச மதம் பிடித்து அலைந்த யானையை அடக்கியவன் எனப் பொய்கையரால் பாராட்டப் பெற்றவன்66