உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தமிழக வரலாறு-சங்ககாலம்-அரசர்கள்.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

26



சோழன் செங்கணானோடு திருப்போர்ப்புறம் எனும் இடத்தில் போரிட்டுத் தோற்றுப் போக, அவனால் சிறை பிடிக்கப்பட்டு குடவாயில் கோட்டத்துச் சிறையில் அடைக்கப்பட்டிருந்த போது, நீர் வேட்கைமிக்கு நீர் கேட்டபோது சிறைக்காவலர் காலம் தாழ்த்துக்கொடுக்க “போரில் விழுப்புண் பெற்று இறப்பது வீரர்க்குஅழகு, அது பெறாதேவீரன் ஒருவன், இறந்துவிடுவனாயினும் அது பெற வாய்ப்பிலாக்குழவி இறந்து விடுமாயினும், அவ்வுடல்களை வாளால் வெட்டி விழுப்புண் உண்டாக்கிப் புதைக்கும் மறக்குடியில் வந்த நான், இழுப்பார் பின், செல்லும் நாய் வாழ்க்கை போலும் வாழ்க்கையில் வாழ்வனோ” என்ற பொருளமைந்த பாடலைப்67 பாடி வைத்துவிட்டு உண்ணாதே உயிர் விட்ட உயர்ந்தோன் இவன்.

கருவூர்ச் சேரமான் சாத்தன்:

காதலிபால் கொண்ட அன்பால், படமெடுத்தாடும் பாம்பையும் அழிக்கவல்ல இடி இடிக்கும் நடுயாமத்தில் வந்து செல்லும் வழக்கம் மேற்கொண்டுள்ளான் காதலன். அவ்வழிக்கொடுமை கேட்டு அஞ்சிய காதலி, “வருக” எனக் கூறவும் அஞ்சுகிறாள். வாராமையால வரும் துயரை நினைந்து “வாரற்க'! எனக் கூறவும் அஞ்சுகிறாள். இது தீர வேண்டுமாயின், இருவரும் மணஞ் செய்து கொள்ள வேண்டும் என உணர்கிறாள் தோழி. அது உணர்ந்த அவள், ஒரு நாள் காதலன் வந்து, காதலிக்காக மனைப்புறத்தே காத்திருக்கும் போது,அவன் கேட்க தாங்கள் அஞ்சும் நிலையைக் கூறித் திருமணம் செய்து கொள்ளும் எண்ணம் அவன் உள்ளத்தில் எழச் செய்து விட்டாள் என்ற பொருள் அடங்கிய பாடல் ஒன்றைக் குறுந்தொகையுள் சேர்த்துள்ளார்.68(269