பக்கம்:தமிழக வரலாறு-சங்ககாலம்-அரசர்கள்.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

41

 அழித்தவன் என்ற காரணம் காட்டியும், அஞ்சி என்பான் வானம் என்ற தன் தலைநகரில் கட்டியிருந்த தொங்கும் கதவுகளைக் கொண்ட கோட்டை, "அகப்பா" என்ற கோட்டை, கழுமலக்கோட்டை ஆகிய மூன்று கோட்டைகளை அழித்தவன் என்ற காரணம் காட்டியும், "துாங்கெயில் எறிந்த தொடித்தோள் செம்பியன்" என அழைக்கப்படும் சோழன், ஆகிய இவ்வறுவரும் வரலாற்றுக்கு முந்திய சோழ அரசர்களாவர்.

சங்க இலக்கியங்கள் துணையால், வரலாறு அறியப்பட்ட சோழ அரசர்கள் பலராவர். அவர்கள் அனைவரையும், இன்னான் மகன் இன்னான் என்றோ, இன்னானுக்குப் பின்னர் அரியணை ஏறியவன், இன்னான் என்றோ அறுதியிட்டுக் காணல் அரிது ஆதலின், அவர் தம் பெயர்களின் அகர வரிசைப்படி, அவர்களின் வரலாற்றினை வரைவாம்.

இராசசூயம்வேட்ட பெருநற்கிள்ளி

இராசசூயம் வேட்ட பெருநற்கிள்ளி, சங்க காலச் சோழ வேந்தர்களுள் காலத்தால் பிறபட்டவன். அரசு பலவற்றை அழித்துப்பெருமை கொண்டவரே இராசசூய வேள்வி இயற்றுதல் கூடும் என்ப. அத்தகு வேள்வி செய்த பேரரசனாவன் இப்பெருநற்கிள்ளி.

இவனைப்பாடிய புலவர்கள்; உலோச்சனார், ஒளவையார், பாண்டரங்கண்ணனார். வடமவண்னக்கன் பெருஞ்சாத்தனார் ஆகிய நால்வராவர். உலோச்சனார் அவன் நாற்படைப் பெருமையைப் பொதுவாக பாராட்டியுள்ளார்3 வேந்தர் மூவரும் ஒருவரை ஒருவர்