பக்கம்:தமிழக வரலாறு-சங்ககாலம்-அரசர்கள்.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

42

 அழிப்பதிலேயே கருத்துடையவர் என்பதற்கு மாறாக இவன் தன் காலத்தே அரசாண்டிருந்த, மாரிவெண்கோ என்ற சேரஅரசனோடும், கானப் பேரெயில் கடந்த உக்கிரப்பெருவழுதி என்ற பாண்டியமன்னரோடும்நட்பு கொண்டு, ஒருங்கு வீற்றிருந்த காட்சி நலம் கண்டு, உங்கள்,இக்காட்சி, அந்தணர் வளர்க்கும் முத்தீக் காட்சி போல் கண்ணுக்கும் கருத்துக்கும் மகிழ்ச்சி அளிக்கிறது எனப் பாராட்டியுள்ளார் ஒளவையார்4 அவன் பகை நாட்டு மீது போர் தொடுத்துப் போகுங்கால் அந்நாட்டில், அவன் படை அந்நாட்டிற்கு விளைவிக்கும் பேரழிவினை விளக்குவதன் மூலம் அவன் படைப் பெருமையைப் பாராட்டியுள்ளார் புலவர் பாண்டரங்கண்ணனார்5 போரில் பெறும் வெற்றியெல்லாம்,அவன் ஆற்றலால், அவன் நாற்படை ஆற்றலால் வந்தனவே எனினும், அவற்றிற்குக் காரணம் தனக்குப் படைத் துணையாக வந்த தேர்வண் மலையனே எனக் கூறிப் பிறர் ஆண்மையைப் பாராட்டத் தெரிந்த பெருமைக்கு உரியவன் இராசசூயம் வேட்டவன் எனப் பாராட்டியுள்ளார் புலவர் வடம வண்ணக்கண் பெருஞ்சாத்தனார்6 தன் புகழ்பாடும், புலவர், பாணர், பொருநர், கூத்தர் முதலியோர்க்குப் பொன்னும்,மணியும், முத்தும் வகைவகையான உடைகளும் தேன் என இனிக்கும் உணவையும் கொடுக்கும், அவன் கொடைத் தன்மையைப் பாராட்டிள்ளார் புலவர் உலோச் சனார்.7