உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தமிழக வரலாறு-சங்ககாலம்-அரசர்கள்.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

உருவப்பஃறேர் இளஞ்சேட்சென்னி

சங்க கால சோழ அரசர்களுள் காலத்தால் முதற்கண் வைத்துச் சிறப்பிக்கப் பெறுவோன் உருவப்பஃறேர் இளஞ்சேட்சென்னி, கரிகாற்பெருவளத்தானின் தந்தை. கரிகாலன், "உருவப்பஃறேர் இளையோன்சிறுவன்" என்பது பொருநராற்றுப்படை14 மனைவி, அழுந்துார் வேளிர் குடியில் வந்தவர். இளஞ்சேட்சென்னி, அழகிய பல தேர்களைக் கொண்டவன் என்பர் பரணர்16 அவனோடு பகை கொண்ட நாட்டவர், தாயில்லாக் குழந்தைபோல் ஓயாது அழுவர் என்றும் பரணர் கூறுவர்.

புலவர் ஊன்பொதி பசுங்குடையரால் பாராட்டப் பெற்றவராகப் பாளுளூர் எறிந்த நெய்தலங்கானல் இளஞ்சேட்சென்னி என்பவனும்17 செருப்பாழி எறிந்த இளஞ்சேட்சென்னி என்பவனும்18 ஆக இருவர் இருக்கின்றனர். நெய்தலங்கானல் இளங்சேட்சென்னி வென்ற பாமுளூரும், இளஞ்சேட்சென்னி வென்ற பாழியும் சேர நாட்டைச் சேர்ந்தனவாம் ஆதலானும் இருவர்க்கும் இளஞ்சேட்சென்னி என்றபெயர் ஒற்றுமை இருப்பதாலும், இருவரையும் பாராட்டிய புலவர் ஒருவராகவே இருப்பதாலும். பாமுளுர் எறிந்தானும், பாழி எறிந்தானும் வேறு வேறு அல்லர் ஒருவரே.

வடுகரை ஓட்டிவிட்டுப் பாழியை அழித்த இளம் பெருஞ்சென்னி என்பவன் ஒருவன் அகநானூற்றில் கூறப்பட்டுள்ளான்19 செருப்பாழி எறிந்தவனும் வடுகரை வென்றான் எனப் புறநானூற்றில் கூறப்பட்டுள்ளான்.20 "பாழியை அழித்தலும் வடுகரை வெற்றிகோடலும் இருவர்க்கும் ஏற்றிக் கூறப்பட்டுள்ளமையாலும்; இளஞ்சேட் சென்னி, இளம்பெருஞ்சென்னி என்ற பெயர்