உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தமிழக வரலாறு-சங்ககாலம்-அரசர்கள்.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

47



கரிகாற் பெருவளத்தான்

கரிகாற் பெருவளத்தான் பெயர். சங்க இலக்கியங்களில், "கரிகாலன்" என "அன்"விகுதி பெறாமல் கரிகால் 'என்றே வழங்கப் பெற்றுள்ளது26 அவன் தன் நாட்டை வளப்படுத்திய சிறப்பால்' அவன் பெயரோடு "வளவ" "வளவன்" என்பது இணைய "கரிகால்ளவன்27" பெருவளக்கரிகால்,28கரிகால்என்பது இன்றி "வளவன்" என மட்டுமே வந்துள்ளது.29 வயல் வளத்தோடு, வாணிப வளத்தால், செல்வத்திருவையும் சேர்த்த சிறப்பறிந்து "திருமாவளவன்" என்றும் அழைக்கப் பெற்றுள்ளான்30

கரிகாற் பெருவளத்தான், அவன் இளமைக் காலத்தில், அவனைச் சிறையிட்டதோடு அமையாது, அவன் பகைவர், சிறையைச் சூழத் தீயையும் வைத்தனர். கரிகாலன், சிறையினின்றும் வெளியேறிய போது, அத்தீயால் அவன் கால் சிறிதே கரிந்து போக, அவன் பெற்றோர் இட்டபெயர் மறைந்து போக, "கரிகாலன்" என்ற காரணப் பெயரே நிலைத்துவிட்டது.31

உருவப்பஃறேர் இளஞ்சேட் சென்னியும், அழுந்துார் வேளிர் தலைவன் மகளும், முறையே, இவன் தந்தையும், தாயும் ஆவர்32கரிகாலன் மனைவியரில் ஒருவர், நாங்கூர் வேளிர்குலச் செல்வி ஆவள்;33 நாங்கூர் வேளிர்குலச் செல்வி மட்டுமல்லாமல், வேறு சில மனைவியரும் இருந்தன.ர்34 அவர்கள் இன்னார் எனத் தெரிய வாய்ப்பில்லை. அதே போல், அவன் மக்கள் பலர் என்பது பட்டினப்பாலையாய்35தெரிகிறது என்றாலும்' அவர்கள் இன்னார் என்பதை அறியும் வாய்ப்பும் இல்லை. கரிகாலன் மகள் ஆதிமந்தி