48
என்பவள்; அவள் கணவன், ஆட்டனத்தி என்ற சேரர்குல இளவல்36
கரிகாலன், அவன் தாயின் கருப்பையில் இருக்கும் போதே அரச உரிமையைப் பெற்றுவிட்டான் எனப் பாராட்டப் பெற்றுள்ளான். "தாய் வயிற்றிலிருந்து தாயம் எய்தி" என்ற பொருநராற்றுப்படைத் தொடரைக் காண்க37 இத்தொடர் கொண்டு அவன் பிறந்தமைக்கு வேறு கற்பனைக் கதையினைக் கட்டி விடுவாரும் உளர். அது நம்புதற்கு இயலாதது.
உருவப்பஃறேர் இளஞ்சேட் சென்னி இறந்துவிட்டானாகவே, அரசைக் கைப்பற்றும் காலம் கருதியிருந்த அவன் தாயத்தார், நாட்டில் குழப்பத்தையும் உண்டாக்கிவிட்டுக் கரிகாலனையும் சிறையில் வைத்து விட்டனர். சிறையில் சில ஆண்டு இருந்து வளர்ந்து வன்மை பெற்றதும், தன்னை அகப்படுத்திய குழியைத் தன் கோடுகளால் குத்திக் குத்திக் குழியைத் துார்த்து விட்டு வெளியேறித் தன் இனத்தோடு சேர்ந்து கொள்ளும் இளைய களிறேபோல், தன் வாள் வலியால், பகைவென்று சிறையினின்றும் வெளியேறிவிட்டான் கரிகாலன்38 கரிகாலனின் இம்முயற்சிக்கு அவன் அம்மானாகக் கருதப்படும் இரும்பிடர்த் தலையார் என்ற புலவர் துணைபுரிந்தார் எனப் பழமொழி வெண்பா ஒன்றைச் சான்று காட்டிக் கூறுவாரும் உளர்.
கரிகாலன் அரசுரிமை பெற்ற உண்மை நிலை இதுவே ஆகவும், அரசிழந்திருந்த சோழநாட்டார் அரச யானை ஒன்றைக் கட்டவிழ்த்து விட்டு, ஆட்சிக்குரியானைத் தேர்ந்து கொண்டு வருமாறு பணிக்க அது,