உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தமிழக வரலாறு-சங்ககாலம்-அரசர்கள்.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

53


உறையூர் மருத்துவன் தாமோதரனார், (புறம்.60) கோனாட்டு எறிச்சிலுார் மாடலன் மதுரைக் குமரனார் (197), கோவூர்க் கிழார் (373) ஆகிய நால்வர் ஆவர்.

அந்நால்வருள் காரிக்கண்ணனார், தமிழ் நாடாண்ட மூவேந்தர்கள், தமமுள் ஓயர்து போரிட்டுவந்ததற்கு மாறாக, குராப்பள்ளித் துஞ்சியான், அப்போது பாண்டி நாடாண்டிருந்த வெள்ளி அம்பலத்துத் துஞ்சிய பெருவழுதியோடு, நட்புகொண்டு, ஒருங்கிருந்த காட்சியைக் கண்டு இந்நட்புறவு இன்றே போல் இருக்குமாயின், உங்களை வெல்வார் உலகில் ஒருவரும் இலர் என அறிவுரை கூறியுள்ளார். அவனைக் "காவிரி கிழவன்" எனவும், "அறம் துஞ்சும் உறந்தைப் பொருநன்" எனவும அழைத்துள்ளார்,49

தாமோதரனார், உப்புப்பொதி ஏற்றிய வண்டி வழியில் பெருங்குழியில் வீழ்ந்துவிட்டபோதும் தம் உரம் கொண்டு ஈர்த்துச் செல்லும் வலிய காளையே போல், அரச வண்டியை இடையூறு போக்கி நடத்திச் செல்ல வல்லவன் வளவன் என வாயாரப் பாராட்டியதோடு, அவனை "வாய் வாள் வளவன்" எனப் பெயரிட்டும் அழைத்துள்ளார்.50

மதுரைக் குமரனார், “அவன் பரிசில் அளிப்பது சிறிதே காலம் கடந்து விட்டதாக, அதுதானும் பொறாது பேராற்றலும், பெருட்செல்வம் உடையவரே எனினும் உள்ளம் இல்லாதாரை யாம் உள்ளேம்; வளம் குறைந்த சிற்றுார் அரசனே, ஆயினும் அவன் பண்புடையனாயின், அவனையே உள்ளுவோம்” என அறிவுரை கூறியுள்ளார்.51

4